சூட்கேஸ் எடுக்க போகும் அந்தவொரு போட்டியாளர்!
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான அமுதவாணனின் நினைவுகளை பிக் பாஸ் மீட்டுக் கொடுத்துள்ளது.
பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 6 தற்போது 102 நாட்களை இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ளது.
இந்த போட்டியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த போட்டியாளர்கள் பிக் பாஸ் ஓட்டிங்கின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியேற்றிய போட்டியாளர்களில் சுமார் 10 போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் கடந்த வாரம் கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறியுள்ளார்.
இவருக்கு சுமார் 20 இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் பணமூட்டையில் 3 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய திருப்புமுனை
இதனையடுத்து நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்புமுனையாக மற்றுமொரு கேஸ் சூட்கேஸ் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூட்கேஸில் பணம் கூடிக் கொண்டே சென்று தற்போது 6,87,500 ஆக உயர்ந்துள்ளது. இதனை யாரும் எடுக்கும் வகையில் நடந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் விட்டில் அமுதவாணனின் நினைவுகள் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த அமுதவாணன் கண்கலங்கியப்படி நின்றுள்ளார். அதில் அதிகமாக ஜனனியுடன் இருந்த நினைவுகள் தான் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் நினைவுகளை பார்த்த பின்னர் பிக்பாஸ், அமுதவாணன் ஒரு கொமடியன் இல்லை இவர் ஒரு கலைஞர் என கூறியுள்ளார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.