பிக் பாஸ் வீட்டில் மீண்டும் குட்டைய குழப்பிய கமல்! குறும்படம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல் அவர்கள் வைத்து செய்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன்6 ஆரம்பித்து சுமாராக 90 நாட்களை கடந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இவர்களில் தற்போது 6 போட்டியாளர்கள் மாத்திரமே இறுதி வாரத்திற்கு செல்வதற்கு தயாராக உள்ளனர்.
மேலும் இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் டாஸ்க்கள் பலப்படுத்தப்பட்டு, இருக்கமாக்கப்படும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டின் இறுதி எவிக்ஷன் என்பதால் ஏடிகே இறுதி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறியதும் இவருக்கான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.
வச்சி செய்த தரமான சம்பவம்
இந்நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய போட்டியாளர்கள் வரிசையில் இருக்கும் ஜிபி முத்துவிடம் கமல் அவர்கள் கேள்வியொன்றை கேட்டுள்ளார்.
இதன்படி, ஜிபி முத்துவிடம் “இந்த வீட்டில் நீங்கள் பார்த்து பயந்த விடயம் என்ன?” என்பதை கேட்டுள்ளார். அதற்கு வழமைப்போல் ஜிபி முத்து சரியான பதிலைக் கூறாமல் மழுப்பிக் கொண்டு நின்றுள்ளார்.
மேலும் இந்த கேள்வியை மீண்டும் கேட்ட போது, “ஓ” என்ற பதிலை அளித்துள்ளார். இதனால் கடுப்பான கமல் அவரை அமருமாறு கூறிவிட்டு அடுத்த போட்டியாளரிடம் சென்றுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை நெட்டிசன்கள் குறும்படமாக்கி பகிர்ந்துள்ளார்கள்.
Boomer muthu is thinking that he is taking a dig at #Vikraman but the actual truth is he is digging a hole for himself. Nalla vela pa nee poita good for you, #ClownAzeem oda join agi expose agi irupa #VaathiVikraman#AramVellum #WinnerVikraman #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/Y2iice2ff1
— siva (@winsiva1994) January 15, 2023
மேலும் இந்த வீடியோவிற்கு ஜிபி முத்து இருந்தால் அவர் தான் டைட்டில் வின்னர் என ஆதரவான் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.