கமல் வைத்த டுவிஸ்ட்! எவிக்ஷனில் சிக்கிய அந்தவொரு போட்டியாளர்
பிக் பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேசனுக்கான போட்டிகள் ஆரம்பித்து விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல பிர தொலைக்காட்சியில் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் விருந்தினர்களாக வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரம் ரக்ஷிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியே சென்ற அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
குறித்த 7 போட்டியாளர்களின் அமுதவாணன் முதல் ஃபைனலிஸ்டாக சென்றுள்ளார். மீதம் ஆறு போட்டியாளர்கள் இந்த எவிக்ஷனில் சிக்கியுள்ளனர்.
புதிய டுவிஸ்ட்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு சில கொடுமையான டாஸ்க்களை வழங்கியுள்ளார்கள். இதனால் விக்ரமன், ஏடிகே, அசீம் ஆகிய போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் கவலையாக இருக்கிறார்கள்.
இன்றைய தினம் பொங்கல் பண்டிகையையோட்டி புதிய டுவிஸ்ட் ஒன்றை கமல் அவர்கள் முன்வைத்துள்ளார்.
இதன்படி, பிக் பாஸ் வீட்டில் மூன்று பானைகள் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு பானையில் சிவப்பு ரோஜா வைக்கப்பட்டுள்ளது.
அந்த ரோஜா யார் மேல் கொட்டுகிறதோ அவர் தான் இன்றைய நாள் எலிமினேட் செய்யப்படுவாராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மைனா, ஏடிகே மற்றும் கதிரவன் ஆகிய போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.