பேட்டியில் ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசிய ரக்ஷிதா! என்ன கூறியிருக்கிறார்?
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே பின்னர் முதல் முறையாக ராபர்ட் மாஸ்டரை பற்றி ரக்ஷிதா மகாலட்சுமி பேசியுள்ளார்.
முக்கிய போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 6 கலந்துக் கொண்ட முக்கிய போட்டியாளர்களில் இருவர் தான் ரக்ஷிதாவும் ராபர்ட் மாஸ்டரும். இவர்கள் பிக் பாஸ் வீட்டில் பெரியளவில் பங்களிப்பு கொடுக்காவிட்டாலம் வெளியில் சற்று பிரபல்யம் அடைந்தவர்களாக காணப்படுகிறார்கள்.
இதனால் மக்களின் ஆதரவு மக்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இருப்பினும் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து இருவரும் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த இரண்டாவது காதலாக பார்க்கப்படுகிறது. அசல் கோளாறு மற்றும் நிவாவிற்கு ஏற்பட்ட நெருக்கத்தினால் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் வெளியேற்றப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து ராபார்ட் மாஸ்டர் புதிய காதல் கதையை உருவாக்கிக்கிக் கொண்டிருந்தார். அந்த வாரமே அவர் வெளியேற்றப்பட்டார்.
ரக்ஷிதாவின் விளக்கம்
மேலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ராபார்ட் மாஸ்டர் குறித்து பேசாத ரக்ஷிதா அவர் வெளியேறிய பின்னர் ராபார்ட் மாஸ்டர் குறித்து பேசியுள்ளார்.
இதன்போது அவர் கூறுகையில், “ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒரு குழந்தை போன்றவர், இவர் செய்யும் காரியங்கள் அணைத்திலும் ஏதாவது ஒரு குழந்தை தனம் கண்டிப்பாக இருக்கும்.
மேலும் அம்மா ஞாபகம் வந்ததும் அழுக ஆரம்பித்து விட்டேன். அதை மறக்க தான் மழையில் நனைந்துக் கொண்டிருந்தேன். இதனை ராபார்ட் மாஸ்டர் தவறான புரிந்துக் கொண்டார். ராபார்ட மாஸ்டர் அழுகும் படி நான் ஒன்றும் செய்யவில்லை.
நான் செய்த விடயத்தை அவர் தவறாக புரிந்துக் கொண்டார். இதனை என்னால் சரிச் செய்ய முடியவில்லை அதனால் தான் நானும் அழுதேன்.
இவர் என் மீது காதல் என்று கூறும் போது இது ஒரு விளையாட்டு மாத்திரமே இதனை வாழ்க்கையுடன் கம்பேர் செய்ய கூடாது எனவும் நான் அறிவுரை தான் கூறினேன்.”
இவ்வாறு மனந்திறந்த ரக்ஷிதாவின் பதிவு சமூக வலைத்தளங்கள் அதிகமாக வைரலாகி வருகிறது.
மேலும் “ராபார்ட் பற்றி ரக்ஷிதா பேசுகிறார் என்றால் ஏதோ சொல்ல முடியாமல் வைத்திருக்கிறார் போல” என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.