ஏடிகேவை அசிங்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்! சந்தோசத்தில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் மற்றுமொரு விருந்தினர்களாக அசல் கோளாறு மற்றும் ராபர்ட் மாஸ்டர் வருகை தந்து பட்டைய கிளப்பி வருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 ல இறுதி காலக்கட்டத்தில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மாத்திரமே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் போட்டியில் ஓட்டிங்கின் மிக நுணுக்கமாக பார்க்கப்படுகிறது. காரணம் குறித்த தொலைக்காட்சி டிஆர்பி ரேங்கில் என்ற பெயரில் ஒரு போட்டியாளர் விளையாட ஆரம்பிக்கும் போது வெளியேற்றப்படுகிறார்கள்.
டாஃப் போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் டாஃப் போட்டியாளர்களாக அசீம், சிவின், விக்ரமன் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்களில் அதிகமான நாமினேஷனுக்கு அசீம் தெரிவாகி மக்களின் ஆதரவு காரணமாக இன்று வரை பிக் பாஸ் வீட்டில் பல அடிகளுக்கு மத்தியில் இருந்து வருகிறார்.
மேலும் விக்ரமனை சாட்டிக் கொண்டு சிவின் பிக் பாஸ் வீட்டில் ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்த விடயத்தை அசீம் பல முறை சுட்டிக் காட்டினாலும் இன்றுவரை மாறவில்லை.
சமிபக்காலமாக பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் அவர்களும் விக்ரமனுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து பக்கசார்பாக பேசி வருகிறார். இதனால் இந்த சீசனில் விக்ரமன் வெற்றியாளர் என ரசிகர்கள் உறுதிச் செய்துள்ளார்கள்.
விசிட்டிங் டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரம் விசிட்டிங் வாரமாக பார்க்கப்படுகிறது பல பிரபலங்கள் பிக் பாஸ் வீட்ற்குள் வந்து செல்கிறார்கள். இதனால் போட்டியாளர்களும் வெளியில் தமது நிலைமை எவ்வாறு இருக்கிறது என அறிந்துக் கொள்கிறார்கள்.
மேலும் இன்றைய அசல் கோளாறு மற்றும் ராபரட் மாஸ்டர் வருகை தந்துள்ளார்கள். இதன்போது போட்டியாளர்கள் உச்சாகத்துடன் வந்து கட்டியணைத்து விளையாடியுள்ளார்கள்.
அசல் கோளாறு ஏடிகேவிடம் மீண்டும் குளம்பியுள்ளார், ஏடிகே விளையாடுவது வெளியிலிருந்து பார்ப்பதற்கு பிடிக்கவில்லை.
இதனால் எனக்கு பேசவும் பிடிக்கவில்லை என அப்பட்டமாக கூறியுள்ளார். அப்போது ஏடிகே பேச விருப்பம் இவல்லையென்றால் பேசாதீங்க என கூறியுள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.