இந்த வாரம் ஓட்டிங்கில் சிக்கிய பிரபலம்! இந்த வாரம் பிக்பாஸ் ரசிகர்கள் கொடுக்கும் புதிய டுவிஸ்ட்
பிக் பாஸ் சீசன் 6 இல் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் பிரபல தொலைக்காட்சி புதிய டுவிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
டுவிஸ்ட்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துக் கொண்ட பிரபலங்களில் சின்னத்திரை பிரபலங்களே அதிகமாக காணப்பட்டனர்.
மேலும் இந்த சீசன் கடந்த சீசன்களை விட போர்சீங்காக இருக்கிறது என ரசிகர்கள் முனுமுனுத்து வந்தனர்.
ஆனால் தற்போது பிக் பாஸ் வீடு சூடுபிடித்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டிலிருந்து சுமார் 10 மேற்ப்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளியேறப்போகும் போட்டியாளர்
இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்பபோகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஓட்டிங்கின் படி இந்த வாரம் அமுதவாணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஒரு குழுவாக செயற்பட துவங்கிய அமுதவாணன், தனலெட்சுமி, ஜனனி ஆகியோரில் மூவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஜனனி மற்றும் தனலெட்சுமி கடந்த வாரங்களில் வெளியேறியுள்ளார்கள்.
மேலும் இந்த வாரம் அமுதவாணன் வெளியேற்றப்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.