பிக் பாஸ் வீட்டில் சகுனி வேலையை மீண்டும் ஆரம்பித்த சிவின்! உக்கிரமாக மோதிக் கொண்ட ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் சிவின் மற்றும் ரக்ஷிதா இருவரும் செய்த சதியால் அசீம் டாஸ்க்கை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் வெகு விமர்சையாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதிலுள்ள போட்டியாளர்களில் 13 போட்டியாளர்கள் குறைவான வாக்குகள் பெற்றதாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஜனனி, ராம், ஆயிஷா, மணிகண்டன், செரீன் , மகேஷ்வரி, ஜிபி முத்து உள்ளிட்டோர் உள்ளடங்குவார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிறைவு காலத்தை எட்டியுள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கான டாஸ்க்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் பல டாஸ்க்கள் கொடுக்கப்பட்டது. இதன்படி, சைக்கிள் பெடல் பண்ணும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பலிவாங்க காத்திருக்கும் பிரபலம்
இந்த டாஸ்க்கில் ஆரம்பத்திலே அசீம் தவறாக விளையாடியதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.
அசீம் வெளியதற்கு சிவின் மற்றும் ரக்ஷிதா தான் காரணம் என அசீம் குற்றஞ்சுமத்திக் கொண்டு, அடுத்த விளையாட்டில் கண்டிப்பாக ரீவன்ஜ் இருக்கிறது என அசீம் அழுத்தமாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட சிவின் இவரின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.