புத்தாண்டு தினத்தையோட்டி கமல் கொடுத்த அதிரடியான டுவிஸ்ட்! டபுள் எவிக்ஷனில் சிக்கிய பிரபலங்கள்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் சிக்க போகும் போட்டியாளர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் சுமார் 10 போட்டியாளர்களும் டபுள் எவிக்ஷனில் இரண்டு போட்டியாளர்களும் இது வரை வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் குழுவாக செயற்படும் போட்டியாளர்கள் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள் என பேசப்படுகிறது.
டபுள் எவிக்ஷன்
இதற்கமைய இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கமல் அவர்கள் மேடையில் அறிவித்திருந்தார்.
இதன்படி, போட்டியாளர்களும் நானாக இருக்கலாம், நான் தான் சார் என நம்பிக்கையற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பு நிலையை எட்டியுள்ளது என்றே கூற வேண்டும். இதிலுள்ள போட்டியாளர்களில் மைனாவும், மணிகண்டனும் தான் குழுவாக செயற்படுகின்றமையினால் இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேறலாம் தகவல் வெளியாகி வருகிறது.
ஏனெனினும் மணிகண்டன் வெளியாவது உறுதியான நிலையில் மற்றுமொரு போட்டியாளர் மைனா அல்லது அமுதவாணன் என இரண்டு போட்டியாளர்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.