பிக்பாஸில் ஃபினாலே சென்ற இரண்டு போட்டியாளர்கள்! கமல் கொடுத்த அதிரடி பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலே வரை சென்றுவிட்டதாக அமுதவானன் தனது கனவு குறித்து கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரமும் போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.
பிக்பாஸில் ஏகப்பட்ட சுவாரசியமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், போட்டியாளர்களும் அருமையாக விளையாடி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடித்தது டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த டாஸ்க் சண்டை இல்லாமல் கலகலப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்த வாரம் நடந்த டாஸ்க் குறித்தும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விஷயங்களை உரையாடி இருந்தார் கமல்ஹாசன்.
ஃபைனலிஸ்டாக சென்ற போட்டியாளர்கள்
கடந்த வாரத்தில் அமுதவானன் சக போட்டியாளர்கள் முன்பு, தனக்கு வந்த கனவு ஒன்றினைக் கூறியுள்ளார். ஏ.டி.கே மற்றும் அமுதவானன் இரண்டு பேரும் ஃபைனலிஸ்ட் ஆக சென்றதாகவும், கமல் சார் இரண்டு பேரின் கையைப் பிடித்துக்கொண்டு எனது கையை மேலே உயர்த்தியவுடன், நான் வின்னர் ஆகிவிட்டதாக நினைத்தேன். ஆனால் வின்னராகியது ஏடிகே என்று கமல் சார் அறிவித்தார். நான் ரன்னர் என்று கூறினார் என்று தனது கனவினை விளக்கினார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த போட்டியாளர்கள் தங்களது கருததுக்களை கூறினர். கனவில் வருவது நடக்காது, ஏன் கனவு கண்டீர்கள்? என்று தனலட்சுமி கூறினார்.
பின்பு ஏடிகே இவ்வாறு பேசினால் வெளியே அனுப்பிவிடுவார்கள்... அமைதியாக இருக்கக் கோரியுள்ளார்.
ஆனால் இதில் டுவிஸ்ட் என்னவெனில், கமல்ஹாசன் அமுதவானன் கனவு குறித்து கதைத்துள்ளார். அமுதவாணனை குறிப்பிட்டு கமல் கூறுகையில், "நானும் ஒரு கனவு கண்டேன். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் செக்யூரிட்டி, பிக் பாஸில் எம் ஆர் ராதா கேரக்டர் வேஷமிட்டுருந்த ஒருவரை அழைத்து வந்து இவர் நன்றாக நடித்திருந்தார் என்று சொன்னார்.
நீங்கள் அருமையாக பண்ணி இருந்தீர்கள். நான் எம் ஆர் ராதா அண்ணனின் ரசிகன்" என்று வாழ்த்தினார். அமுதவாணன் கனவு குறித்து பேசி, அவரது எம் ஆர் ராதா நடிப்பையும் கமல்ஹாசன் பாராட்டி இருந்த விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.