விஜயை மையப்படுத்தி ‘TN 2026’ படம் எடுக்கப்படதா? பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி!
உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில், உருவாகியுள்ள ‘டிஎன் 2026 படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றது.
எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி திரைக்கு வரவுள்ள இந்த திரைப்டம் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே, இது நடிகர் விஜயை குறிவைத்து எடுக்கபட்டிருப்பதாகவும் அரசியல் சாடை பேசும் விதத்தில் வசனங்கள் அமையப்பெற்றிருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா இந்த படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

ட்ரெய்லரில் எங்க தலைவர் விஜயை கலாய்ப்பது போல காட்சிகள் இருப்பதாகவும், ஒரு தனிநபரை இப்படிச் சினிமாவில் சித்தரிப்பது சரியா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அதனால் இந்த சர்ச்சை கருத்துக்கள் மேலும் வலுப்பெற்றது.
ஜனநாயகன் திரைப்படமே தேர்தல் காரணமாக தள்ளிப்போயிருக்கையில், முழுக்க அரசியல் பேசும் இந்த படம் எப்படி திரைக்கு வருகின்றது என கேள்வி எழுப்பியதுடன் இந்த செயலின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

உமாபதி பதிலடி
இதற்கு உடனடியாக இயக்குனர் உமாபதி ராமையா பதிலடி கொடுத்தார். "நாங்கள் விஜய் அண்ணாவை கலாய்க்கவே இந்த படம் எடுத்தோம் என்று சொல்லப்படுவது முற்றிலும் தவறு. எனக்கு விஜய் அண்ணா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
அவர் ஒரு சிங்கம் மாதிரி. அந்த மாதிரி ஒருவரை எப்படிச் சினிமாவில் அவமதிக்க முடியும்? ட்ரெய்லரை பார்த்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். படம் முழுவதும் பார்த்த பிறகு தான் உண்மை புரியும்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

தம்பி ராமையா பதில்
இது குறித்து தம்பிராமையா குறிப்பிடுகையில், "ஆதவ் அர்ஜுனா பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அவருக்கு யாரோ தவறான தகவல் கொடுத்திருக்கலாம்.
நாங்கள் எந்த இடத்திலும் விஜயை தவறாக காட்டவில்லை. விஜய் எனக்கு தம்பி மாதிரி. அவருடன் நான் வேலை செய்த அனுபவமும் இருக்கிறது.
மேலும் 10 நாட்கள் முன் நடந்த சம்பவத்தை படமாக்குவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும். அப்படியென்றால், இப்போது நடக்கும் சம்பவங்களை எப்படி இப்போதே படமாக்க முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது யாரையும் குறிவைத்து எடுத்த படம் இல்லை, ஒரு பொது அரசியல் கதை என குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |