நடிகை ராஷ்மிகா கர்ப்பமா? நாங்க இப்போ 3 பேரு ஆகிட்டோம்... அவரே வெளியிட்ட பதிவு!
திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன், ராஷ்மிக்காவின் பதிவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.
இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் பல கொண்டாட்டங்களுக்கு நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
அனைத்து புகைப்படங்களையும் இந்த தம்பதியினரே இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கினர்.

அதனை தொடர்ந்து தாய்லாந்தின் கோ சாமுயியில் உள்ள ஒரு தனிப்பட்ட Airbnb வில்லாவில் ஹனிமூன் கொண்டாடிய காணொளியை அவர்களே தங்களின் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளர்.

இந்நிலையில்,"இப்போது நாங்கள் மூன்று பேர்" என ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருப்பதால் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கின்றார் என வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
உண்மை என்ன?

ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லையாம். ராஷ்மிகா இரண்டாவதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருக்கிறார்.
ஒரு கற்பனை கதாபாத்திரத்துடன் அவர் பேசுவது போல அனிமேஷன் புகைப்படங்களை அந்த கணக்கில் பதிவிட்டு வருகின்றார்.
அந்த அனிமேஷன் கதாபாத்திரம் மற்றும் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து ராஷ்மிகா இருப்பதை தான் மூன்று பேர் என குறிப்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவின் காரணமான தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |