பொலிவிழந்த அழகுக்கு மீள் வாழ்வு கொடுக்கும் மாதுளம் பழ எண்ணெய்- வீட்டிலேயே செய்யும் எளிய வழி
நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் பழங்களில் எல்லாம் ஒரு பலன் தான் இருக்கிறது என்று, ஆனால் ஒரு பழத்தில் இருந்து ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மனித உடலில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சினைக்கு பழங்களில் தீர்வு உள்ளது. பார்ப்பதற்கு சிவப்பாகவும், கவர்ந்து இழுக்கும் வாசணையில் இருக்கும் மாதுளம் பற்றி பலருக்கும் தெரியாத விடயத்தை நான் இன்று உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
அதாவது, நுரையீரல் கோளாறுகள், செரிமான கோளாறுகள், எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆண், பெண் இருபாலாருக்குமான பாலியல் நலன்கள் உள்ளிட்ட பல வேலைகளை மாதுளம் பழம் தனியாளாக நின்று செய்கிறது.
அத்துடன் சரும ஆரோக்கியத்திற்கும் மாதுளம் பழம் சில உதவிகளை செய்கிறது என சரும மருத்துவர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டுள்ளார்.
புனிகலஜின் (Punicalagin) எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்டை தன்வசம் வைத்திருக்கும் மாதுளம் பழத்தின் எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவினால் முகத்திலுள்ள சிறுசிறு பிரச்சினைகள் இல்லாமல் போகுமாம்.. இந்த கருத்து உண்மையா? என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- தண்ணீர்-2 கப்
- மாதுளம் பழம்- 1
- பாதாம் எண்ணெய்- 50ml
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் சூடான தண்ணீரை எடுத்து தனியாக வைக்கவும். அதில் மாதுளம் பழத்தை நான்காக வெட்டி போடவும். அதன் பின்னர் மாதுளம் பழத்திலுள்ள முத்துகளை மாத்திரம் தனியாக பிரித்து எடுக்கவும்.

தோலை தனியாக எடுத்தவுடன், நன்றாக இருக்கும் முத்துக்கள் மாத்திரம் கீழே இருக்கும். அதனை மாத்திரம் தனியாக வடிக்கட்டி எடுக்கவும். அந்த மாதுளம் முத்துக்களை ஒரு காட்டன் துணியில் பரப்பி கொஞ்சம் காய வைக்கவும்.
இதனை ஒரு சுத்தமான கண்ணாடியில் போட்டு வைக்கவும். அதில் 50 மில்லி பாதாம் எண்ணெய்யை கொஞ்சமாக காய்ச்சி போத்தல் உள்ளே ஊற்றவும்.
எண்ணெய் ஆறவுடன் மூடிப்போட்டு வெயில் படாத இடத்தில் மறைவாக வைக்கவும். சுமாராக 10, 15 நாட்களுக்கு பின்னர் போத்தலை திறந்து அதில் உள்ள எண்ணெய்யை மாத்திரம் வடிக்கட்டி எடுக்கவும்.

பயன்படுத்தும் முறை
1. உங்களுடைய முகத்தை நன்றாக சுத்தம் செய்து விட்டு, இந்த மாதுளம் எண்ணெய்யை அப்ளை செய்யலாம்.
2. வழக்கமாக எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்கள் இது போன்ற எண்ணெய்களை முகத்திற்கு அப்ளை செய்யமாட்டார்கள். ஆனால் இந்த எண்ணெய்யில் பெரிதாக பிசுபிசுப்பு இருக்காது என்பதால் உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.
3. எண்ணெய் தடவி, 10, 15 நிமிடங்களுக்கு பின்னர முகத்தை நன்றாக கழுவினால் பொலிவிழந்த முகம் பொலிவாகவும், பார்ப்பதற்கு மின்னும் வகையிலும் இருக்கும்.

4. மாதுளம் எண்ணெயை கொஞ்சமாக எடுத்து மிதமான சூடாக்கி தலைக்கு வைத்து கூட மசாஜ் செய்யலாம். அதன் பின்னர் தலைக்கு கொஞ்சமாக நீராவி படும்படி வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் டவலை எடுத்து விட்டு, பகல் முழுவதும் வைத்து விட்டு குளிக்கவும். இப்படி செய்தால் உங்கள் தலைமுடி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
மக்களே!!
மாதுளம் பழ எண்ணெய் பயன்படுத்துவதால் உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால் உரிய மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |