உடல் சூட்டை தடுக்க வேண்டுமா? கட்டாயம் இதையெல்லாம் செய்திடுங்க
உடல் சூடு காரணமாக அவதிப்படுபவர்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய அவசர காலத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மொத்தமாக மாறியுள்ளது. ஆம் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றினால் உடல் சூடு அதிகரிப்பதும் ஒரு பிரச்சனையாகும்.
உடலில் சூடு அதிகரித்துவிட்டால், தலை மற்றும் வயிறு வலி, மலச்சிக்கல், சோர்வு போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இதனை மிகவும் சுலபமாக வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் சூட்டை தணிக்க என்ன செய்ய வேண்டும்?
உடல் சூட்டை தணிப்பதற்கு முதலாவதாக போதுமான தண்ணீர் பருக வேண்டும். உடம்பை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேற்ற உதவுமாம். குளிர்ந்த நீரை அருந்துவது உடல் சூட்டை உடனடியாக தடுக்குமாம்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது அவசியம், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, மோர் இவற்றினை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, வாழைப்பழம், அன்னாசி பழம் உடம்பிற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
ஆனால் உணவில் உடல்சூடு சரியாகவில்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |