முடி காடு மாதிரி வளருமா? இந்த ஒரு பொருள் போதும்
முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் வாழ்க்கை முறையும் மாறிவருகின்றது. அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம், சரியான தூக்கம் இல்லாமல், அதிகமான பணிச்சுமை இவற்றின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டால் முடி உதிர்வு பிரச்சனையும் ஏற்படுகின்றது. இதனால் சிறு வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுவதுடன், இதற்காக பல எண்ணெய்கள், மருந்துகள் இவற்றை வாங்கி சாப்பிடவும் செய்கின்றனர்.
ஆனால் இதனால் அவ்வளவாக நன்மைகள் கிடைப்பதில்லை. நமது சமையல் அறையில் உள்ள ஒரே ஒரு பொருளை வைத்து எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சீரகம் அளிக்கும் பலன்
50 கிராம் சீரகத்தை இரவு தண்ணீரில் உற வைத்து, காலையில் அதனை அரைத்து தலையில் பேக்காக போடவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் வழக்கமாக இருக்கும் முடிஉதிர்வு பிரச்சனை சரியாகும்.
முடி வேகமாக வளர்வதுடன், முடிக்கு நல்ல மருந்தாகவும் செயல்படுகின்றது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி காடு மாதிரி வளருமாம்.

சீரகத்தின் பலன்கள்
சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள நிலையில், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தலையில் உள்ள பொடுகு மற்றும் அரிப்பை குணமாக்கும்.
முடி உதிர்வை தடுக்க உதவுவதுடன், சீரக தண்ணீரால் தலையை அலசவும் செய்யலாம். சீரக எண்ணெய் பயன்படுத்தினால் முடியின் வளர்ச்சி தூண்டப்படுகின்றது.

சீரகம் கூந்தலுக்கு இயற்கை மெருகூட்டியாக செயல்படுவதுடன், முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதுடன், முடிக்கு நல்ல பலனையும் கொடுக்கின்றது.
சீரக தண்ணீரை தினமும் குடித்து வந்தால் அஜீரணப் பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |