சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டுக்கோழி உப்பு தெரக்கல் செய்வது எப்படி தெரியுமா?
காரசாரமான சுவையான மனமான நாட்டுக்கோழி உப்பு தெரக்கல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
நாட்டுக்கோழி உப்பு தெரக்கல்
பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் ஆரோக்கியமானதும்,நிறைய சத்துக்களை கொண்டது நாட்டுக்கோழி.
இது நம் தமிழகத்தில் பலர் விரும்பி சாப்பிடும் உணவு ஆகும்.நம் தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி வறுவல்,நாட்டுக்கோழி குழம்பு போன்றவை செய்யும் வழக்கம் உள்ளது.
ஆனால் நமக்கு தெரியாத நிறைய உணவு வகைகளை நாம் செய்யலாம் அவ்வாறு செய்யப்படுவதுதான் நாட்டுக்கோழி உப்பு தெரக்கல்.
இது ஒரு செட்டிநாடு பகுதியில் செய்யப்படும் மகவும் பிரபலமான உணவு மற்றும் இது அனைவரது வீட்டிலும் செய்யக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் இது குறைவான மசாலா பொருட்களால் செய்யப்படுவதால் இது செய்வதற்கு மிகவும் எளியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி -அரை கிலோ
சின்ன வெங்காயம்-தேவையான அளவு
வரமிளகாய்- தேவையான அளவு
கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்
உப்பு.- தேவையான அளவு

செய்முறை
முதலில் நமக்கு தேவையான அளவு நாட்டுக்கோழியை எடுத்து அதை நன்றாக கழுவி பின்கு அதில் மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு ஊற விட வேண்டும்.
பின்பு அதை குக்ககரில் சேர்த்து அதை 3 முதல் 4 விசில் வரை வைத்து வேக வைக்க வேண்டும்.பின்பு ஒரு வானொலியில் கறிவேப்பிலை சேர்த்து நாம் வேகவைத்த நாட்டுக்கோழியை அதில் சேர்க்கவும்.
பின்பு அந்த கோழியில் உள்ள தண்ணீர் வற்றியபின் தேவையான மசாலா பொருட்களையும் நாம் எண்ணெயில் வறுத்த கோழியையும் சேர்த்து அது சிவந்த நிறமாக வர வேண்டும்.இதுவே தெரக்கல் பதம் ஆகும்.
சிக்கன் நன்கு வெந்து வந்து நாம் சேர்த்த வெங்காயம் மற்றும் மிளகாய் சாறு இறங்கியபின் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டுக்கோழி உப்பு தெரக்கல் ரெடி.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |