கணவன்- மனைவி பந்தம்: விவாகரத்து கவுன்சிலர் சொன்ன டிப்ஸ்
பொதுவாக திருமணத்திற்கு முன்னர் தம்பதிகள் காதலிப்பது போன்று திருமணத்திற்கு பின்னர் காதலித்து கொள்வதில்லை.
கணவன் - மனைவி என வரும்போது பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் அதிகமாகி விடுகின்றது. இதனால் தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் காதலை மறந்து கடமையில் இறங்கி விடுவார்கள்.
சில கணவர்கள் திருமணத்திற்கு பின்னர் மனைவிமாரை கண்டுக் கொள்ளமாட்டார்கள். இதனால் பெண்கள் அதிகமாக மன அழுத்தத்திற்குள்ளாகின்றார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் தான் அதிகமாக விவாகரத்து நடக்கின்றது.
இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்காமல் இருந்தால் அவர்களின் வாழ்க்கை கணவன் - மனைவியாக நீடிக்கும்.
அப்படியாயின் மனைவிகள் எப்படியான கணவர்களை அதிகம் விரும்புவார்கள் என்பதனை விவாகரத்து கவுன்சிலர் ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பான குறிப்புக்களை தொடர்ந்து பதிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விவாகரத்து கவுன்சிலர் சொன்ன டிப்ஸ்
1. புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு கண்டிப்பாக குழந்தையொன்று இருக்கும். அவர்களை கவனித்து கொள்ளும் விதம் உங்களின் மனைவியின் கவனத்தை ஈர்க்கும். மனைவிகளை ஓய்வில் வைத்து விட்டு நீங்கள் உங்கள் குழந்தைகளின் வேலைகளை செய்யும் போது உங்களுக்குள் இருக்கும் காதல் அதிகரிக்கும். உதாரணமாக, குழந்தையின் ஈரமான துணி அல்லது நாப்கின்களை அகற்றி புதிய ஒன்றை மாற்றுவது.
2. குழந்தைகள் என வரும் போது மனைவிமார்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுடன் விளையாடும் போது உங்கள் மனைவியின் கவனம் உங்கள் மீது கண்டிப்பாக விழும்.
3. சிறு பிள்ளைகள் அல்லது குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்கள் வேலைகளை முடித்து விட்டு சோர்வுடன் படுக்கைக்கு வருவார்கள். அந்த சமயத்தில் குழந்தை குழப்பம் செய்தால் கணவராக நீங்கள் அவர்களை பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் போது மனைவி உங்களை அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பார்.
4. பொதுவாக கணவன் - மனைவி மற்றும் காதலன்- காதலி இப்படி எந்த உறவில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்த வேண்டும். மனைவியை மற்றவர்கள் முன் மரியாதையாக நடத்தினால் உங்களுக்குள் இருக்கும் அன்பு அதிகரிக்கும். குடும்பமும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |