கழுத்த சுத்தி அதிக சதை அசிங்கமா தொங்குதா? அதை குறைக்க இந்த பொருட்கள் போதும்..!
உடல் நலனில் அக்கறை செலுத்துகிறவர்கள் யாவரும் முதலில் கவனிக்க வேண்டியது சாப்பிடும் உணவுகள் மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கத்தினை சரி பார்க்க வேண்டும்.
தொப்பை,இடுப்புப் பகுதி, கைகள் என ஒவ்வொரு பாகமாக கவனம் செலுத்தும் நபர்களும் இருக்கிறார்கள். இவர்கள், இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் கவனிக்க மறந்த விஷயங்களில் ஒன்றினைப் பற்றி தான் இன்றைக்கு பேசப்போகிறோம்.
சிலருக்கு உடம்பெல்லாம் நார்மலாக தெரியும். ஆனால் கழுத்துப் பகுதியில் மட்டும் அதிக தசையுடன் காணப்படும்.
இதனால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமையில் ஆரம்பித்து ஏரளமான சங்கடங்களை சந்தித்திருப்பார்கள்.
கழுத்தில் இருக்கும் அதிக தசையை போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
தவிர்க்க
முறையான உணவுப்பழக்கம் மூலமாகவே இந்தப் பிரச்சனையை பாதியளவு உங்களால் குறைக்க முடியும். குளிர்ந்த பொருட்கள், பாக்கெட் உணவுகள் போன்றவற்றை தவிர்த்திடுங்கள்.
இதைத்தவிர தொடர்ந்து சின்ன சின்ன பயிற்சிகளை செய்ய வேண்டும். இதைவிட முக்கியமான ஒன்று சர்க்கரையை அதிகம் சேர்க்கக்கூடாது.
இந்தப் பிரச்சனையை தீர்க்க நீங்கள் அவசியமாக எடுத்துக் கொள்ள உணவுப் பட்டியலினை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கழுத்து கொழுப்பு
பிற பாகங்களை விட கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு முக்கியமாக பார்த்தால் சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
முதலாவது ஒபீசிட்டி. இந்த பிரச்சனை இருப்பவர்களின் உடலும் சற்று குண்டாகவே இருக்கும். ஓவர் வெயிட் இருப்பவர்களுக்கு கழுத்துப் பகுதியிலும் கொழுப்பு சேரும்.
இதைத் தவிர சில மருத்துவ காரணங்கள் சொல்லப்படுகிறது. தைராய்டு பிரச்சனை, மற்றும் சில ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் கழுத்துப் பகுதியில் அதீத தசை ஏற்படும். இதைத் தவிர மாரடைப்பு தொடர்பான பிரச்சனைகள், அதற்காக நீண்ட நாட்களாக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும். சிலருக்கு வயதின் காரணமாகவும் இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.
உடற்பயிற்சி
நேராக நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சினை இழுத்து விடுங்கள். இப்போது உங்கள் கழுத்தை மட்டும் சற்று மேல் நோக்கி நிமிர்த்திடுங்கள். உங்களால் முடிந்தளவு செய்திடுங்கள்.
பின் நார்மல் பொசிசனுக்கு வந்து ஐந்து செக்கண்ட் ரிலாக்ஸ் செய்த பிறகு மீண்டும் அதேபடி செய்ய வேண்டும். இரண்டாவதாக செல்ஃபி எடுக்கும் போது கிஸ்ஸிங் போஸ் கொடுப்போமே அதே போல பத்து முறை செய்ய வேண்டும்.
இப்போது ஃபிஷ் பேஸ் உங்கள் கன்னங்கள் உள்ளிழுக்க வேண்டும். இது மூன்றாவது பயிற்சி. நான்காவதாக வாயை அகல விரித்து மூடுங்கள். இப்படியே பத்து முறை செய்ய வேண்டும். தினமும் வாக்கிங், ஜாக்கிங் போன்ற பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செய்திடுங்கள்.
தண்ணீர்
எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது இது. எப்போதும் உங்கள் உடலை ஹைட்ரேட்டடாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரைத் தவிர நீராகரங்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
கற்றாழை
கற்றாழை ஜூஸ் ஒரு நாளைக்கு இரண்டு வேலை குடிக்கலாம். காற்றாழை உடல் எடை குறைக்க பெரிதும் உதவிடுகிறது. இதனை சாப்பிட்டால் உடலில் இருக்கிற கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை எனர்ஜியாக மாற்ற உதவிடுகிறது. இதனால் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வது தவிர்க்கப்படும்.
ஆளி விதை
ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம். குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அப்படியில்லை என்றால் ஒரு கப் தண்ணீரை சூடாக்குங்கள்.
அதில் ஆளி விதைகளை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆறியதும், அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலையில் இந்த தண்ணீரை தயாரித்து குடிக்கலாம்.
இதில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. கழுத்தில் இருக்கும் தசைகளை குறைக்க பெரிதும் உதவிடும்.