1000 தடவை அதவானித்தாலும் சலிக்காத காட்சி... குடிசை வீட்டில் குறையாத பாசம்
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம். அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம்.
வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது. இங்கும் குடிசை வீட்டில் ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் கேஸ் சிலிண்டர் வசதி கூட இல்லை.
வீட்டில் தாய், விறகு அடுப்பில் தோசை சுட்டு குழந்தைக்குக் கொடுக்கிறார்.
அப்போது தன் தங்கை கையில் மருதாணி வைத்திருப்பதால் அந்த குடிசை வீட்டில் இருக்கும் அண்ணன் தோசையை தன் தங்கைக்கு ஊட்டிவிடுகிறார். 14 நொடிகள் மட்டுமே ஓடும் இந்தக் காணொளி நம்மை பாசத்தில் சிலிர்ப்பூட்டுகிறது.