தைராய்டு பிரச்சனையால் குழந்தையின்மை ஏற்படுமா? மருத்துவ விளக்கத்துடன் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக உடம்பில் ஏற்படும் சில ஹார்மோன்ஸ் மாற்றங்களினால் தைராய்டு பிரச்சினை ஏற்படுகின்றது.
தைராய்டு ஹார்மோன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இது மாதவிடாய் வராமல் தடுத்து பெண்களுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
இவற்றை தொடர்ந்து எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், மன அழுத்தம் ஆகிய பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் தைராய்டு பிரச்சினைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தைராய்டு பிரச்சினைகளின் விளைவுகள்
1. பொதுவாக நமது உடலில் தைராய்ட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது இனப்பெருக்க உறுப்பை பாதிக்கும். ஏனெனின் இதன் சுரப்பிகள் இனப்பெருக்க உறுப்புடன் நேரடி தாக்கத்தை கொண்டுள்ளது.
2. தைராய்டு பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு கர்வுற்றல் திறன் குறைவாக இருக்கும். இதனால் திருமணத்திற்கு பின்னர் குழந்தையில்லாமல் கூட போகலாம் வாய்ப்பு இருக்கின்றது.
3. தைராய்டு ஹார்மோன் TSH இன் அதிகரிப்பு காரணமாக, அதன் நேரடி தாக்கம் புரோலேக்டின் ஹார்மோனில் இருக்கலாம்.
4. ப்ரோலாக்டின் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலை தாக்குகின்றது. அத்துடன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனையும் பாதிக்கிறது.
5. தைராய்டு ஹார்மோன் காரணமாக பெண்களின் மாதவிடாய் தள்ள போகின்றது. ஆகவே தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் சரியான மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ள வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
1. காய்கறிகள் மற்றும் தேங்காய் எண்ணெய்
2. ஆப்பிள் வினிகர் உட்க் கொள்ள வேண்டும்.
3. மஞ்சள் கலந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |