திருமண வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக அமைவது எந்த ராசிக்கு?
திருமணத்திற்கு பின்பு எந்தெந்த ராசிக்கார்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
திருமணம்
திருமணம் என்றாலே வீட்டில் அனைவரும் ஆவலாக காத்திருக்கும் ஒரு நிகழ்வாகும். நிறைய உணவுகள், பரிசுகள் என ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகவே இருக்கும்.
பொதுவாகவே நம் ஊர்களில் திருமணம் என்றாலே ஜாதகத்தில் பொருத்தம் இருக்கின்றதா? என்பதை கட்டாயம் பார்க்கின்றனர்.

அவ்வாறு இருவருக்கும் பொருந்தியிருந்தால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால் ஒருவரது ராசியினைக் குறித்தும் அவர்களது திருமண வாழ்க்கையை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிலர் திருமணத்திற்கு முன்பு கஷ்டத்தில் காணப்படுவார்கள்... சிலர் திருமணத்திற்கு பின்பு மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அவ்வாறு திருமணத்திற்கு பின்பு ராஜவாழ்க்கை வாழும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிம்மம்
சிம்ம ராசியினர் தங்களது தனித்திறமையினை கொண்டுவருவதில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள். குடும்ப ஆதரவு மற்றும் துணை மூலம் இவர்களுக்கு அதிகமான ஆதரவு கிடைக்கும்.
தொழில் மற்றும் அரசியல் துறைகளில் சிறந்து விளங்குவதுடன், பணம் எப்பொழுதும் இவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். நீண்ட நாட்கள் செழிப்பாக இருப்பார்களாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் திருமணத்திற்கு பின்பு வீட்டிலும் அதிகமான சொத்து சேர்ப்பார்கள். ஜோதிடத்தின் படி தனது துணை மற்றும் குடும்ப நிலைக்கு பொருளாதார பாதுகாப்பினை வழங்குவதுடன், வீடு மற்றும் வாகனம், நிலம் போன்றவற்றையும் சேர்ப்பார்கள்.
இயல்பாக பொருளாதார சிந்தனை கொண்ட இவர்கள், துணையின் உதவியுடன் சிறப்பாக முதலீடு செய்து சமூகத்தில் நல்லதொரு அந்தஸ்தை பெறுவார்கள்.

துலாம்
திருமணம் துலாம் ராசியினருக்கு ஒரு திருப்புமுனையாக இருப்பதடன், வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் வளமாக வாழ்வார்கள்.
துலாம் ராசியினரின் நுணுக்கமான சமூக திறன் மற்றும் உயர்நிலையுடன் இருப்பதுடன், அதிகாரம், புகழ், மேன்மை போன்ற வாய்ப்புகளும் கிடைக்கும்.
தொழிலில் வேகமாக வளர்வதுடன், அடுத்தடுத்து மிகப்பெரிய பதவிகளுக்கும் செல்கின்றனர். திருமணத்திற்கு பின்பு இவர்கள் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கை தரத்தினை வலப்படுத்துமாம்.
மகரம்
கடின உழைப்பாளியாக இருக்கும் மகர ராசியினருக்கு திருமணத்திற்கு பின்பு கூடுதல் பொறுப்பு மற்றும் ஊக்கம் ஏற்படுமாம். இவர்களது முயற்சிகளுக்கு பலமடங்கு பலன் கிடைப்பதுடன், தொழில் வளர்ச்சி, அதிகாரப் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
தொழில் வளர்ச்சி, அதிகார பதவியுடன் இருக்கும் இவர்கள் பணவரவு உயர்ந்து குடும்பம் செழித்து காணப்படுவார்கள். ஒருங்கிணைந்து செயல்பட்டால், திருமணத்திற்கு பின்பு நிலையான வெற்றியையும், மரியாதையையும் பெற முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |