அனல் பறக்கும் ஓட்டிங்! எலிமினேஷனில் ஏற்பட்ட மாற்றத்தால் அதிரடியாக வெளியேறும் போட்டியாளர்..
பிக் பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறிய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் திகதி சுமார் 21 போட்டியாளர்களுடன் கோலாகளமாக ஆரம்பமாகியது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஆரம்பித்து எட்டாவது வாரம் சென்றுக் கொண்டிக்கிறது.
இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து, அசல் கோளாறு, சாந்தி, செரீனா, மகேஷ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தான் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எலிமினேட்டில் மாற்றம்
இதன்படி, பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட்டாகும் போட்டியாளர் குயின்சி என தகவல் வெளியாகியுள்ளது.
குயின்சி தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்களில் முறையாக பங்கேற்கவில்லை, தூங்குவதை வழக்கமாகக் கொண்டு செயற்ப்பட்டார்.
இதனால் கடந்த வாரம் வெளியேற்றப்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.
ஆனால் இந்த வாரம் நாமினேஷனில் இவர் தான் முதலில் சிக்கினார்.
மேலும் இந்த வாரம் ஒட்டிங்கிலும் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறவுள்ளதாக கூறப்படுகின்றது.