இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானாம்! சந்தேகமின்றி வெளியான தகவல்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் இடத்தை தட்டிச் செல்கிறது. இந்த போட்டி ஆரம்பத்திலிருந்து முடியும் வரை பல ஊடகங்களுக்கும் கன்டென்ட் கொடுத்து வருகின்றன.
மேலும் இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்த போட்டியில் ஆரம்பத்தில் மொத்தமாக 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
வெளியேறப் போகும் போட்டியாளர்கள்
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் மகேஸ்வரி, செரீன், அசல் கோளாறு, ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருக்கும் போது பிக் பாஸ் வீட்டில் தினமும் பல சண்டைகள் நிலவி வந்தது. தற்போது 8 பேர் கொண்ட பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னருக்கான டாஸ்க்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் ரக்ஷிதா மகாலட்சுமி என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் மிகவும் அமைதியான போட்டியாளராக விளையாடி வந்தார்.
டைட்டில் வின்னர் இவர்தானாம்
இவரின் உண்மையான முகத்தையும் குணத்தையும் இதுவரையில் காட்டாம ரசிகர்களை போலியான முகத்தைக் காட்டி ஏமாற்றி வருகிறார் என ரசிகர்கள் பலர் குற்றஞ்சுமத்தி வருகிறார்கள்.
ரக்ஷிதா இது குறித்து எவ்விதமான கருத்தை வெளியிடாமல் சேவ் கேம் விளையாடுவதால் இவர் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த வாரம் விவாதம் டாஸ்க்கில் சற்று விளையாட ஆரம்பித்திருக்கிறார்.
இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் ஓட்டிங்கில் குறைவாக இருக்கும் காரணத்தினால் இவர் வெளியேற்றப்படுகிறார்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் சிவின், அமுதவாணன், அசீம், விக்ரமன் ஆகியோரில் யாராவது வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bye Bye #Rachitha#BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/FxKWntYfdx
— BiggBoss Booster (@bb_booster) January 6, 2023