த்ரிஷாவிற்கு இணையான சம்பளம் நானும் வாங்குகிறேன்... பிரபல நடிகை ஓபன் டாக்
நடிகை த்ரிஷா வாங்கும் சம்பளத்தினையும், அதற்கு இணையாக தானும் சம்பளம் வாங்குவதாக பிரபல நடிகை கூறியுள்ளார்.
சனம் ஷெட்டி
தமிழ் சினிமாவில் அம்புலி படத்தின் மூலம் 2012ம் ஆண்டு நடிகையாக வந்தவர் தான் சனம் ஷெட்டி. இதன் பின்பு பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் 2022ம் ஆண்டு மஹா என்ற படம் கடைசியாக வெளியானது. அதன் பின்பு எந்த படமும் வெளியாகமல் இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவர் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் த்ரிஷா குறித்து இவர் பேசியுள்ளது ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சம்பளம் எவ்வளவு?
நடிகை த்ரிஷா தனது சம்பளத்தினை 12 கோடியாக மாற்றியுள்ளதாகவும், தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குவதாக பெயர் வந்தது.
இதனை பகிர்ந்த சனம் ஷெட்டி எனது சம்பளம் கூட ஒரு படத்திற்கு 12 கோடி என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் அதற்கு நீங்கள் த்ரிஷாவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு சனம் ஷெட்டி ஆம் நான் த்ரிஷா இல்லை என்று கூறியுள்ளார். நடிகை த்ரிஷா சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பினையும் கொடுத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |