சனி பகவானின் ஆசி பெற்ற ராசிகள் எது தெரியுமா? அவர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்.
சனி பகவானின் ஆசியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிரிஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சனியின் உதயம்
ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படும் கிரகம் சனி கிரகம். சனி கிரகம் என்றாலே பலருக்கும் பயம் தான் தொற்றிக் கொள்ளும்.
ஏனெனில் நாம் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை கொடுக்கும் கிரகமாக சனிபகவான் பார்க்கப்படுகின்றது. நாம் செய்யும் நன்மை, தீமைக்கு தகுந்து பலன் கிடைக்கும்.
அந்த வகையில் சனியின் ஆசீர்வாதத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மகரம்
மகர ராசியினர் சனி பகவானுக்கு பிடித்த ராசியாக இருக்கின்றனர். இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளியாகவும், தான் செய்ய நினைக்கின்ற வேலையினை விடாமுயற்சியுடன் செய்பவராகவும் இருப்பார்கள். தோல்வி ஏற்பட்டாலும், இறுதியில் அதனை வெற்றியாகவே மாற்றிவிடுவார்கள்.

கும்பம்
கும்ப ராசியினர் சனிபகவான் நன்மையை அளிக்கின்றார். இவர்கள் மிகவும் நேர்மையானவராகவும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையைக் கொண்டவராகவும் இருக்கின்றனர்.
சனி பகவானின் பிடித்த குணமான நேர்மையை பின்பற்றுவதில் முக்கிய குணமாக வைத்திருக்கின்றனர். இவர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் இவர்களுக்கு கிடைக்கும்..

துலாம்
இந்த ராசியில் சனி பகவானின் அருள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர் இந்த ராசிக்காரர்களுக்கு கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்ட மாட்டார். ஏனென்றால் அவர்கள் கும்ப ராசியை போல் நியாயத்தின் பக்கம் இருப்பவர்கள். இதனால் இவர்களுக்கு அதிர்ஷ்டமும், தொழில் வளர்ச்சியும் அவர்களை தேடி வரும்.
ரிஷபம்
பொதுவாகவே ரிஷப ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பார். அப்படி இருந்தாலும் சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆகும். இதனால் அவர்களுக்கு எப்போதும் சனி பகவான் கணிவான பார்வையை வைத்திருப்பார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் சனி பகவான் அவர்களை பாதுகாப்பார். இதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய தடைகள் வராது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |