பாத்ரூமில் கட்டாயம் இருக்க வேண்டிய 3 பொருட்கள் - வாஸ்து சொல்லும் ரகசியம்!
3 Must Have Bathroom Items for a Positive Home : நம்மில் பலரும் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவோம்.
ஆனால், வீட்டின் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும் குளியலறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவது கிடையாது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறை என்பது நீர் சக்தியுடன் தொடர்புடைய ஓர் இடமாகக் கருதப்படுகிறது. எனவே, அங்கு வைக்கப்படும் சில பொருட்கள் வீட்டில் நேர்மறையான சூழலை உருவாக்கவும், எதிர்மறை ஆற்றலைக் குறைக்கவும் உதவும் என்பது வாஸ்து நம்பிக்கை.
அந்த வகையில், உங்கள் குளியலறையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 3 முக்கியமான பொருட்களைப் பற்றித்தான் இந்தக் காணொளியில் பார்க்கப் போகிறோம்.
கல் உப்பு
ஒரு சிறிய கண்ணாடிப் பாத்திரத்தில் கல் உப்பை எடுத்துக் குளியலறையின் யாரும் தொட முடியாத ஓர் இடத்தில் வைக்கலாம். வாஸ்து நம்பிக்கையின்படி, கல் உப்பு எதிர்மறை ஆற்றலை அகற்ற உதவும் ஒரு சுத்திகரிப்புப் பொருளாகக் கருதப்படுகிறது. இதனை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பசுமையான செடிகள்
குளியலறையில் பசுமையான செடிகளை வளர்ப்பது நல்லது என்று வாஸ்து பரிந்துரைக்கிறது. குறிப்பாக, மணி பிளான்ட் மற்றும் பாம்பு செடி போன்றவற்றை வைப்பதன் மூலம் குளியலறைக்கு இயற்கையான அழகையும் பசுமையையும் சேர்க்க முடியும். மேலும், சரியான பராமரிப்புடன் வளர்க்கப்படும் சில செடிகள் உட்புறக் காற்றின் தரத்திற்கும் உதவக்கூடும்.
கதவில் ஒரு கண்ணாடி
மிகவும் முக்கியமாக குளியலறைக் கதவில் ஒரு சிறிய கண்ணாடியை வைப்பது குறித்தும் வாஸ்துவில் சில நம்பிக்கைகள் உள்ளன.குறிப்பாக, வீட்டின் அமைப்பில் குளியலறையின் திசை பொருத்தமற்றதாக இருந்தால், கண்ணாடியைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |