கிரீஸில் அரங்கேறிய காதல் ப்ரொபோசலா? அனிருத் – கவ்யா மாறனின் வைரல் வீடியோ!
Anirudh and Kavya Maran's Romantic Video Goes Viral: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி கவ்யா மாறனிடம் கிரீஸ் நாட்டில் வைர மோதிரம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்துது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் திருமணம் இன்று கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ள நிலையில் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைர மோதிரத்துடன் அனிருத் - வைரலாகும் காணொளி
அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. ஆனால், இந்த வீடியோவில் தெரிவது உண்மையான சம்பவம் அல்ல என ஒரு தரப்பு குறிப்பிட்டு வருகின்றது.
மேலும், அனிருத் அல்லது கவ்யா மாறன் இருவரில் யாரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் திருமணம் அல்லது காதல் திருமணக் கோரிக்கை தொடர்பான எந்தவொரு புகைப்படத்தையோ, வீடியோவையோ இதுவரை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோவில், அனிருத் போன்ற தோற்றமுடைய ஒருவர், கவ்யா மாறனைப் போன்ற தோற்றமுடைய பெண்ணுடன் கைகோர்த்து நடந்து செல்கிறார். அவர்கள் கிரீஸ் நாட்டின் அழகிய சுற்றுலாத் தலத்தில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, அந்தப் பெண்ணைச் சுற்றி வரச் செய்யும் அந்த நபர், பின்னர் அவரது முகத்தைப் பிடித்து, மின்னும் வைர மோதிரம் ஒன்றைக் காட்டுகிறார். அதன்பிறகு அந்த மோதிரத்தைப் பெண்ணின் விரலில் அணிவிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த பலரும், கிரீஸ் நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் கொண்டாட்டத்தின்போது அனிருத், கவ்யா மாறனிடம் திருமணக் கோரிக்கை விடுத்திருக்கலாம் எனப் பேசி வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.
Ani literally composed his own love story 🥹❤️💍 #AnirudhKavyaWedding #Anirudh https://t.co/4ksGcy2gd2
— Anirudh FC (@AnirudhfansTN) November 10, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |