ஃபிரிட்ஜில் இந்த உணவை வைத்து சாப்பிடாதீங்க... விஷமாக மாறும் ஜாக்கிரதை
ஃப்ரிட்ஜின் பெரும்பாலான உணவுப்பொருட்களை சேர்த்து வைத்து பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை பதிவே இதுவாகும்.
இன்றைய காலத்தில் ப்ரிட்ஜில் உணவுகளை சேமித்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகி வருகின்றது. ஆனால் இவ்வாறு உணவுப்பொருட்களை வைப்பது நல்லதல்ல.
சிலர் காய்கறிகளை பாதி பயன்படுத்திவிட்டு மீதியை ப்ரிட்ஜில் வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நஞ்சை ஏற்படுத்தும் உணவுகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நஞ்சை ஏற்படுத்தும் உணவுகள்
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாதாம். இதில் லைகோபீன் உள்ளதாகவும், மேலும் இதிலுள்ள கரோட்டினாய்டு சிவப்பு நிறத்தை அளிக்கின்றது. தக்காளியை குளிரூட்டும்போது லைகோபீனின் கட்டமைப்பை மாற்றி, அது டோமடைன் கிளைகோல்கலாய்டு எனப்படும் கிளைகோல்கலாய்டாக மாறுகிறது. இந்த டொமடைன் கிளைகோல்காய்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே தக்காளியை வெளியே வைக்க வேண்டும்.
இதே போன்று உருளைக்கிழங்களையும் ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அதிலும் பாதியாக வெட்டிய உருளையை வைத்தால் அது மிகவும் தவறாகும். குளிர்ந்த வெப்பநிலை காரணமாக உருளைக்கிழங்கின் மாவுசத்து சர்க்கரையாக மாறி ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுத்துகின்றது. உருளைக்கிழங்கை வெளியே காற்றோற்றமாக, ஈரப்பதம் குறைவாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதில் வைப்பதால் அங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றது. இதனால் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படுவதுடன், ஃப்ரிட்ஜில் உள்ள குளிர்ச்சியால், வெங்காயத்தில் உள்ள நொதிகள் செயல்படுத்தப்படும் நிலையில், வெங்காயமும் விரைவில் கெட்டுப் போய்விடுமாம்.
Image Source : FREEPIK
பூண்டை தோல் உரித்து ஃப்ரிட்ஜில் சேமிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ள நிலையில், இதனால் வேர்கள் தோன்ற ஆரம்பிப்பதுடன், சுவையும் குறைந்துவிடு்ம். உரித்த பூண்டை சேமிக்க விரும்பினால், காற்று புகாத டப்பாவில் போட்டு காற்றோட்டமான இடத்தில் வைக்கலாம். இவை 3 நாட்களுக்கு ப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
வாழைப்பழத்தையும் ஃப்ரிட்ஸில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனை காற்றோட்டமாக வைத்திருந்து பயன்படுத்தவும், ஃப்ரிட்ஜில் வைத்தால் இதனுடைய சுவை குறைவதுடன் 2 நாட்களுக்குள் அழுகவும் தொடங்கிவிடுகின்றது.
image: pinterest
தேனை ஃப்ரிட்ஜில் வைத்தால் விரைவில் கெட்டுப் போய்விடும். தேனில் நொதிகள் குளிரூட்டல் மூலம் செயல்படுத்தப்படுகின்றது. தேனில் நொதித்தல் ஏற்படுத்துவதுடன், தரம் மற்றும் சுவையும் மாறிவிடும்.
குளிர்சாதன பெட்டியில் ரொட்டியை வைத்தால் அதன் தன்மை மாறுவதுடன், மொறுமொறுப்பு தன்மை மாறி நமத்து போய்விடும். மேலும் பூஞ்சை உண்டாகி விரைவில் கெட்டுப்போய்விடும். நீங்கள் ரொட்டியை காற்று புகாத கொள்கலனில் சேமித்தால் போதுமானது.
PHOTO: GREG DUPREE / FOOD STYLING BY MICAH MORTON / PROP STYLING BY CLAIRE SPOLLEN
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |