2026 புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?
முக்கிய கிரகங்களின் மாற்றங்களால் 2026ம் ஆண்டு புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் மாற்றம்
2026ம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், இதில் முக்கிய கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
ஜோதிடத்தின்படி கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அதன் நிலைபாடு மனிதர்களின் வாழ்க்கையில் வலுமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
ராகு, கேது, சனி, குரு போன்ற கிரகங்கள் ஒரு ராசியினுள் நீண்ட காலம் பயணம் செய்கின்றது. இதனால் சிறிய மாற்றங்கள் காணப்பட்டாலும் பலரின் வாழ்வில் பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் 2026ம் ஆண்டு புதுவருடத்தில் சனி பகவான் மீன ராசியில் இருக்கின்றார். குரு மிதுனம், கடகம், சிம்மம் ராசிகளில் பயணிப்பதால் இந்த ராசியினருக்கு தனித்துவமான பலன்களை அளிக்கும். ராகு முதலில் கும்ப ராசியிலும் பின்பும் மகர ராசியிலும் இருக்கின்றார்.
இதனால் எந்தெந்த ராசியினர் மோசமான நிலைக்கு செல்லாமல் கவனமாக இருக்க வேண்டியவர்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
2026 புத்தாண்டில் மேஷ ராசியினருக்கு சவாலானதாக இருப்பதுடன், ஏழரை சனி நடப்பதால் கடுமையான சிரமத்தையும் சந்திப்பார்கள்.
பணியிடங்களில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சிம்மம்
2026 புத்தாண்டானது சிம்ம ராசியினருக்கு சிறப்பானதாக இருக்காமல், வேலையில் அதிக சிரமம் ஏற்படும். அஷ்டம சனி காரணமாக மனநிலை மற்றும் ஆரோக்கிய பிரச்சனையும் அதிகரிக்கும்.
வேலை மற்றும் முதலீட்டில் தடைகள் அதிகமாக காணப்படும்... எனவே முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதாகும்.

தனுசு
பிறக்க இருக்கும் புத்தாண்டில் தனுசு ராசியினருக்கு நிதி இழப்பு, தேவையற்ற செலவுகள், பணியிடங்களில் சிரமம், ஆரோக்கியத்திலும் மோசமான நிலை காணப்படும்.
பல பிரச்சனைகளை சந்திக்கும் இவர்களுக்கு மருத்துவ செல்வுகள் அதிகமாகும்... நிதி பற்றாக்குறைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |