ஆரம்பமாகும் குரு பெயர்ச்சி... பண விடயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?
குரு பெயர்ச்சி ஆரம்பமாக இருக்கும் நிலையில், எந்தெந்த மூன்று ராசியினர் பண விடயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி
ஜோதிட கிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் அறிவு, செல்வம், திருமணம் அதிர்ஷ்டம் இவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
குரு பகவான் தற்போது கடக ராசியில் பயணித்து வரும் நிலையில் அக்டோபர் 31ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகின்றார். இந்த பெயர்ச்சியானது சில ராசியினருக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
ஆனால் இந்த குரு பெயர்ச்சிக்கு பின்பு பண விடயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினரின் 4வது வீட்டில் குரு பகவான் செல்லும் நிலையில், குடும்ப வாழ்க்கை மற்றும் வேலையில் சமநிலையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருப்பதுடன், உயர் அதிகாரிகளிடம் நிதானமாக பேசுவது மிகவும் முக்கியம்.
சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட வேலையினை முடிக்க முயற்சிப்பதுடன், எந்தவொரு விடயத்திலும் யோசித்து செயல்பட வேண்டும்.
முக்கியமாக முதலீடு செய்யும் முன்பு சரியாக உள்ளதா என்று சரிபார்க்கவும். குடும்பத்தினரிடம் பேசும் போதும் பொறுமையாக இருக்கவும். ஏனெனில் உறவில் விரிசல் கூட ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசியின் 11வது வீட்டில் குரு பகவான் செல்லும் நிலையில், தொழில் மற்றும் நிதி ரீதியாக முக்கியமான காலக்கட்டமாக இருக்குமாம்.
வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். கூட்டு வணிகம் செய்பவர்கள் பண பரிவர்த்தனைகளில் சிறப்பான கவனம் எடுக்கவும்.
எந்தவொரு முதலீடு்டையும் அவசரப்பட்டு செய்வது வேண்டாம். கொடுக்கல் வாங்கல் ஆவணங்களை நன்றாக சரிபார்த்து முடிவு எடுக்கவும்.
செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில் பணபிரச்சனையை சந்திக்கக்கூடும். உறவுகளில் பொறுமையாக பேசுவது சிறந்தது.

மீனம்
மீன ராசியில் குரு 6வது வீட்டில் செல்லும் நிலையில், தங்களது திட்டங்கள், பொறுப்புகள் இவற்றில் சிறந்த கவனம் எடுக்க வேண்டும். பணியிடத்தில் அவசர முடிகளை எடுப்பதை தவிர்க்கவும்.
அதிகமான வேலைப்பளு இருந்தாலும், அதனை சரியாக முடிப்பதற்கு முயற்சிக்கவும். நிதி விடயத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
கடன் வாங்கும் முன்பு நன்றாக யோசித்து வாங்குவது சிறந்தது. குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக பேசி தீர்ப்பது அவசியம் ஆகும். முக்கியமாக உங்களது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |