இந்த பொருள்களை சோப்பு போட்டு கழுவாதீங்க... பாதிப்பு வரும் ஜாக்கிரதை
பாத்திரம் மற்றும் துணிகளுக்கு சோப்பு பயன்படுத்தும் நிலையில், எந்ததெந்த பொருட்களுக்கு சோம்பு பயன்படுத்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அழுகான ஒரு பொருளை நாம் அவதானித்தால் முதலில் தோன்றுவது சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பது தான்.
துணிகளை துவைத்தல், பாத்திரம் கழுவுதல் இவற்றிற்கு சோப்புகளை பயன்படுத்தும் நாம், சில பொருட்களுக்கு மட்டும் சோப்புகளை பயன்படுத்தக் கூடாது என்பது தெரியுமா?.
ஆம் அவ்வாறு சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யக்கூடாத பொருட்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எந்தெந்த பொருட்களுக்கு சோப்பு வேண்டாம்
இரும்பு பாத்திரங்களை சோப்பு கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோப்பு பயன்படுத்தும் போது எளிதில் துருபிடித்து விடுவதுடன், மேலும் இவை சமைக்கும் உணவின் சுவையையே மாற்றவும் செய்கின்றது. சோப்பிற்கு பதிலாக உப்பு, வெந்நீர் பயன்படுத்தி கழுவவும்.
இதே போன்று கம்பளி போர்வைகளை துவைக்கும் போது சோப்பு துவைக்கக்கூடாது. ஏனெனில் சோப்பு கொண்டு துவைக்கும் போது கம்பளி போர்வை சீக்கரமாகவே சுருங்கிவிடுமாம்.
பட்டுப்புடுவைகளையும் சோப்பு போட்டு துவைக்கக்கூடாது. ஏனெனில் அவற்றின் நிறம் மங்கிவிடுவதுடன், பட்டு நூலில் சேதம் ஏற்பட்டுவிடும். ஆதலால் சோப்பு கொண்டு துவைப்பதற்கு பதிலாக ட்ரை வாஷ் செய்வது மிகவும் நல்லதாம்.
ஃபர் ஆடைகளை துவைக்கும் போது சோப்பு பயன்படுத்த வேண்டாம். ஃபர் ஆடைகளில் சோப்பு பயன்படுத்தும் போது அவை சேதமடைந்துவிடும்.
உங்கள் வீட்டில் இருக்கும் சோபா, ஹேண்ட் பேக் போன்ற லெதர் பொருட்களை சுத்தம் செய்வதற்கு சோப்பை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை சேதமடைந்துவிடுமாம். ஆதலால் துணியை தண்ணீரில் நனைத்து துடைத்து சுத்தம் செய்தாலே போதுமானதாக இருக்கும்.
காய்கறி, பழங்கள் வெட்டும் கத்தியை சோப்பு போட்டு சுத்தம் செய்வது கூடாது. ஏனெனில் சோப்பு பயன்படுத்தினால் துருப்பிடித்துவிடுவதுடன், கத்தி சீக்கிரமாக மந்தமாகிவிடுமாம். ஆகவே கத்தியை ஈரமான துணியை வைத்து துடைத்தால் போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |