மறந்தும் இந்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்காதீங்க! வீட்டுக்கு தரித்திரம் வருமாம்
வீட்டில் சில பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கக்கூடாது... அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்து சாஸ்திரத்தின் படி விளக்கு ஏற்றிய பின்பு அதாவது மாலை 6 மணிக்கு மேல் எந்தவொரு பொருளையும் மற்றவர்களுக்கு கடன் கொடுக்க மாட்டார்கள்.
இவ்வாறு கொடுப்பதால் வீட்டில் உள்ள செல்வமும் சேர்ந்து போய்விடும் என்ற ஐதீகம் முன்னோர்களிடையே இருந்து வந்தது. பின்பு தரித்திரம் வீட்டிற்கு வந்துவிடும் நிலையில், என்னென்ன பொருட்கள் கடனாக கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
கடனாக கொடுக்கக் கூடாத பொருட்கள்
வீட்டில் இருக்கும் அரிசியை பக்கத்து வீட்டினருக்கு தானமாக கொடுத்தால் வீட்டிலுள்ள மகிழ்ச்சி அவர்களுடனே சென்றுவிடுமாம். மேலும் சுக்கிரதோஷம் ஏற்பட்டு வீட்டில் அடிக்கடி சண்டையும் ஏற்படுமாம்.
சனி பகவானுக்கு தொடர்புடையதாக கருதப்படும் எள், கடுகு, எண்ணெய் இவற்றினையும் யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. அதிலும் சனிக்கிழமை அன்று கொடுக்கவே கூடாது. ஏனெனில் சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்த நாளாகும். இதே போல பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் அக்கம்பக்கத்தினருக்கு கடனாக கொடுக்கக்கூடாது.
வியாழன் கிரகத்துடன் தொடர்புடைய மஞ்சளையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கக்கூடாது. இதனால் குரு தோஷம் ஏற்படும்.
பூண்டு வெங்காயம் இவை இரண்டும் கேதுவுடன் தொடர்புடையதால் இதையும் கனாக அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்கக்கூடாது. மீறினால் வீட்டில் செழிப்பு அப்படியே நின்று போய்விடும்.
மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் உப்பை பிறருக்கு கடனாக கொடுக்கக்கூடாது. இவை உங்களது வீட்டில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
துடைப்பத்தையும் யாருக்கும் கடனாக கொடுக்கக்கூடாது. மீறினால் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படும். இதே போன்று நீங்கள் பயன்படுத்திய துணிகள், செருப்பு, பூஜை பொருட்கள் இவற்றினையும் கனடாக கொடுக்க வேண்டாம்.
எதை தானம் செய்யலாம்?
பசி என்று வந்து சாப்பாடு கேட்பவர்களுக்கு அன்னதானம் கொடுப்பதால் வீட்டில் உள்ள வறுமை நீங்கும்.
வீட்டில் கிழிந்த அல்லது பழைய துணிகைளைக் கொடுக்காமல் புது துணி எடுத்து கொடுத்தால் உங்களது ஆயுள் பெருகும்.
பிறருக்கு தேனை தானமாக கொடுத்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |