உச்சம் பெறும் குருவினால் ராஜயோகத்தை அடையும் 3 ராசியினர்... உங்க ராசி இருக்கானு பாருங்க
உதயமாகி உச்சம் பெறப்போகும் குருவினால் ராஜ வாழ்க்கையை அடையும் 3 ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உச்சம் பெறும் குரு
தேவர்களின் குருவான வியாழன் கடந்த மே மாதம் 1ம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி அநை்துள்ளார். இன்னும் சில தினங்களில் அஸ்தமன நிலையில் இருக்கும் குரு சில நாட்களில் உதயமாக உள்ளார்.
வேத ஜோதிடத்தின்படி, குரு பகவான் விழாயன் வருகிற ஜூன் 3ம் தேதி ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார்.
எனவே குரு வியாழனின் உதயம் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமாக இருக்கும் ராசியினரை குறித்து பார்க்கலாம்.
மேஷம்
குரு ரிஷப ராசியில் உதயமாவதால், மேஷ ராசியினருக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நிதி ஆதாயம் உண்டாவதுடன், வெளிநாடு செல்ல வேண்டிய கனவு நிறைவேறும்.
நண்பர்களின் ஆதரவைப் முழுமையாக பெறுவதுடன், மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் சாதகமான தாக்கம் ஏற்படும். வேலையால் வாழ்க்கையில் நிம்மதி காணப்படுவதுடன், வியாபாரிகளுக்கு குருவின் உதயம் மிகவும் சாதகமான பலனைத் தரும்.
கடகம்
குரு உதயத்தால் கடக ராசியினருக்கு மிகவும் மங்களகரமான பலனைத் தருவதுடன், வாழ்க்கையில் நன்மையும் பயக்கும். குருபகவான் உச்சம் பெறுவதால், கடக ராசியினருக்கு வியாபாரத்தில் அதீத லாபத்தை தருவதுடன், வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் பெறுவதுடன், அரசியல் துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியிரின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் குரு உதயமாகும் நிலையில், அதிர்ஷ்டத்தை அள்ளி வாரி தருகின்றது. பெரியவர்களின் ஆதரவு இந்த நேரத்தில் கிடைப்பதுடன், அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கு முடிவிற்கு வரும் நிலையில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மூதாதையரின் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாவதுடன், மனைவியின் ஆதரவால் தொழிலில் பண வரவு உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |