அர்ஜுன் மகள் திருமணம் எங்கு நடக்கப்போகுதுனு தெரியுமா? ஒரு பத்திரிக்கையே இத்தனை ஆயிரமா?
நடிகர் அர்ஜுன் தனது மகளுக்கு திருமணம் வைக்கும் இடம் மற்றும் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன்
தமிழ் சினிமாவல் ஆக்ஷன் கிங் ஆக இருக்கும் அர்ஜுன் தனது மகளுக்கும், பிரபல காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க உள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
ஜுன் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அர்ஜுன், தம்பி ராமையா இருவரும் பிரபலங்களுக்கு அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னுடைய முதல் அழைப்பை சம்மந்தி தம்பி ராமைய்யாவுடன் சென்று வைத்த அர்ஜுன், திருமணத்தை தன்னுடைய பண்ணை தோட்டத்திலேயே நடத்த முடிவு செய்துள்ளாராம்.
பத்திரிக்கை மட்டும் இத்தனை ஆயிரமா?
ஜுன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் இருக்கும் அர்ஜுனின் பண்ணை தோட்டத்தில் இருவரின் திருமணம் நடைபெற உள்ளது.
மேலும் திருமண பத்திரிகையை பாக்ஸ் போன்று பிரத்தேயகமாக டிசைன் செய்துள்ளனர். ஒரு பத்திரிகையின் விலை சுமார் 5 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
திருமண நிச்சயதார்த்தத்திற்க்கே, தங்க தட்டில் விருந்து, விசேஷ சிறப்பு பரிசுகள், மகளுக்கும் - மண மகனுக்கும் விசேஷமாக டிசைன் செய்யப்பட்ட உடை, கோடி கணக்கில் மதிப்பு கொண்டு 5 கேரட் மாணிக்க கல் பதித்த மோதிரம் என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த , நடிகர் அர்ஜுன் அதை விட திருமணத்தை பிரமாண்டமாக நடந்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |