உங்க கண்ணில் இந்த அறிகுறிகள் தெரியுதா? கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் ஜாக்கிரதை
உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினையை வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
கொலஸ்ட்ரால் என்பது பிசுபிசுப்பாக இருக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள் ஆகும். இவை இயற்கையாகவே நமது உடம்பில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாகும் போது உயிரை பறிக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது. இன்றைய வாழ்க்கை முறை, ஜங்க் ஃபுட், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையினால் கொலஸ்ட்ரால் அதிகரித்து, ரத்த குழாய் சுவர்களின் படிந்து ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றது.
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காணப்படும் அறிகுறிகள்
சருமத்தில் குறிப்பாக கண் இமைகளைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் திட்டுக்கள் காணப்பட்டால், அது உயர் கொலஸ்ட்ராலின் எச்சரிக்கையாகும். இவை இதய நோயின் அபாயம் அதிகம் இருப்பதைக் காட்டுகின்றது. எனவே உங்கள் கண்களில் இப்படியான மஞ்சள் நிற திட்டுகள் தென்பட்டால், உடனே மருத்துவரை பார்க்கவும்.
கண்களின் கருவிழியின் விளிம்பைச் சுற்றி ஏதேனும் வித்தியாசமான நிறத்தில் அதாவது வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் தெரிந்தால் அதுவும் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதற்கான அறிகுறியாகும். ஆகவே கருவிழியில் மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரை அனுகவும்.
ஒருவரது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அவை சருமத்தில் மஞ்சள் நிறத்தில் காட்டுமாம். இதனை ஹைப்பர்லிபிடெமியா என்று அழைப்பர். இவ்வாறு முகம் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் காணப்பட்டால் உடனே மருத்துவரை அனுகவும்.
இதே போன்று சருமத்தின் மேற்பரப்பிற்கு அடிப்பகுதியில் கொலஸ்ட்ரால் தேங்கியிருந்தால், சாந்தோமாஸ் எனப்படும் தீங்கற்ற கட்டிகளை உருவாக்கும். இவை பார்ப்பதற்கு பிம்பிள் போன்று மஞ்சள் நிறத்தில் காணப்படும். இவை மஞ்சள் நிறத்திலும் காணப்படும். பருக்கள் மாதிரி வலி இல்லாமல் இருந்தால் இவை அதிக கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |