சோகத்தை நிரந்தரமாக்கும் பழக்கங்கள் - இனி செய்யாதீங்க
பொதுவாக நம்மில் சிலர் எப்போது பார்த்தாலும் சோகமாகவே இருப்பார்கள். இதற்கான காரணம் சில சமயங்களில் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
சோகமாக இருப்பதற்கு அவர்களின் மோசமான பழக்கங்கள் கூட காரணமாக இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் அந்த மோசமான பழக்கங்களை கைவிடுவதன் மூலம் சந்தோசமான ஒரு வாழ்க்கைக்கு திரும்பலாம்.
நேர்மறையான எண்ணங்கள், மற்றவர்களை காயப்படுத்தாத பழக்கங்கள் இவை இரண்டும் ஒரு மனிதருக்குள் வந்து விட்டால் அவர் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்வார்.
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் மன நிம்மதி, சந்தோஷம் இவை இரண்டும் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. இவை இரண்டும் இல்லாத நபர்கள் வாழும் போதே நகரத்தில் வாழ்வார்கள்.
“ தீய பழக்கங்கள் அல்லது தீய பழக்கங்கள் உள்ள நண்பர்களுடன் உறவு ஆகியவை எப்போதும் உங்களுக்கு தீய சிந்தனைகளை உருவாக்கும்...” என சாணக்கியர் வலியுறுத்தியுள்ளார்.
அறிஞர்களின் கருத்துக்களில் ஒரு விதமான உண்மை இருக்கும். அதனை படித்து தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் இன்னும் உயரத்திற்கு செல்லலாம்.
அந்த வகையில் சோகத்தைத் தூண்டக்கூடிய சில பொதுவான பழக்கவழக்கங்கள் குறித்தும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருத்தல்.
பொதுவாக சில உடல் ஆரோக்கியத்தில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள். காலை எழுந்துவுடன் வேலைக்கு செல்வார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை தராது. நடைபயிற்சி, ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டால் உடல் சோர்வாக இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கும். தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் சரி நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
2. மோசமான தூக்கம்
தூக்கத்திற்கு மனநிலை மாற்றத்திற்கு நெருக்கமான தொடர்பு உள்ளது. ஒருவர் சோர்வாகவே இருக்கிறார் என்றால் அவர் சில சமயங்களில் முறையாக தூங்காமல் இருக்கலாம். தூங்க வேண்டிய நேரங்களில் வேறு வேலைகள் செய்து கொண்டிருந்தால் உடல் ஓய்வில்லாமல் இயங்கும். அப்போது ஒரு கட்டத்திற்கு மேல் இயங்காமல் சோர்வடையும். தூக்கம் வரவில்லையென்றால் சூடான தண்ணீர் குடிக்கலாம் அல்லது நன்றாக குளிக்கலாம் இவை உங்களுக்கு சீக்கிரம் தூக்கத்தை கொண்டு வரும். உங்களின் படுக்கையறை எப்போதும் அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இவை நிம்மதியான தூக்கத்தை உங்களுக்கு தரும்.
3. தனிமைப்படுத்தல்
மனிதர்களால் ஒரு அளவுக்கு மேல் தனிமையில் வாழ முடியாது. இப்படி இருப்பவர்கள் காலப்போக்கில் மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள். உங்களை சுற்றி ஒரு உறவை சரி வைத்து கொள்ளுங்கள். கஇன்றைய பிஸி வாழ்க்கையில் இளைஞர்கள், வேலை பொறுப்புகள், தனிப்பட்ட சவால்கள் அல்லது டிஜிட்டல் கவனச்சிதறல்கள் காரணமாக சிலர் தனிமையை அதிகமாக விரும்புகிறார்கள். இது அவர்களுக்கு மன ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும். மனிதர்களுக்கு சமூக தொடர்பு இருக்க வேண்டும். இது உங்களுக்குள் இருக்கும் தனிமையை போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கொண்டு செல்லும். முடிந்தவரை நண்பர்கள், குடும்பம், அயலவர் என கூட்டத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |