இந்த நோய் இருப்பவர்கள் தவறியும் வெண்டைக்காய் சாப்பிட கூடாது ஏன்னு தெரியுமா?
வெண்டக்காயின் கொழகொழப்பு தன்மையில் பல சிறப்புக்கள் காணப்படுகின்றது.
வெண்டைக்காயில், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன.
இது உடலில் பல ஆரோக்கிய நன்மை உள்ளது. இதில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுகின்றது. இது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது.
ஆஸ்த்துமா நோய் இருப்பவர்களுக்கு இந்த வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, அதன் தீவிரத்தை குறைக்கிறது. ஆனால் இதை யார் யார் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்டைக்காய் சாப்பிட மூடியாதவர்கள்
வெண்டைக்காயில் லெக்டின் என்ற புரதம் உள்ளது. இந்த புரதம் அலர்ஜியை உண்டாக்கும். ஆனால் இது எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கும் என கூற முடியாது. இதை சாப்பிட்ட பின் அலர்ஜி ஏற்பட்டால் இதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
ஆனால் இதை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதில் அதிக நார்ச்சத்து காணப்படகின்றது.
இது சிலருக்கு வாயு மற்றும் வீக்கத்தை உண்டாக்கலாம். எனவே இதை செரிமானப்பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிட கூடாது. மீறி சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.
இந்த காய்கறியில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடிய கூறுகள் உள்ளன. நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்கள் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்காதவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி வெண்டைக்காயை சாப்பிட கூடாது. குறிப்பாக சொன்னால் வெண்டைக்காய் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது இல்லை.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் வெண்டைக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது. எல்லா கர்ப்பிணி பெண்களும் வெண்ணடைக்காய் உட்கொள்ள முடியாது.
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் வெண்டைக்காயை சாப்பிடவே கூடாது. ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை அதிகரிக்கிறது. சில சமயம் இதனால் சிறுநீரக இழப்பு கூட ஏற்படலாம்.
வெண்டைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இந்த பதிவில் குறிப்பிட்ட சிலருக்கு இது உகந்தது அல்ல என்பதை இப்பதிவில் சுலமாக அறிய முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |