பாகற்காயை கசப்பே தெரியாமல் சமைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பாகற்காயை கசப்பு தெரியாமல் சமைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்
பாகற்காயை என்றாலே பலரும் தெரிந்து தான் ஓடுவார்கள். ஆம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முகம் சுழிக்கவும் வைக்கின்றது.
இதற்கு காரணம் இதிலுள்ள கசப்பு தன்மை ஆகும். இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது முக்கியமான காயாகும்.
பாகற்காய் என்றாலே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது தான் எல்லார் நினைவுக்கும் வரும். ஆனால் அதைத் தாண்டியும் அதிகமான சத்துக்களைக் கொண்டுள்ளது.
Photo: Shutterstock
பாகற்காயில் 32 வகையான வேதி உள்ளடக்கங்கள் உள்ளன. ஒரு கப் அல்லது 130 கிராம் சமைத்த பாகற்காயை உண்பதன் மூலமாக 53.3 கலோரிகள் கிடைக்கும்.
புரதச்சத்து: 1.07 கிராமும், கொழுப்பு 3.52 கிராமும், கார்போஹைட்ரேட் அளவு 5.45 கிராம், சர்க்கரையின் அளவு 2.46 கிராமாக உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 2.47 கிராம் கிடைக்கிறது.
பாகற்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி சத்தானது ஒரு கப்பில் 41.5 கிராம் கிடைக்கின்றது.
நன்மைகள் என்ன?
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பாகற்காய் உதவும். பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த்தொற்றுகளையும் எதிர்த்துப் போராட பாகற்காய் உதவுகிறது .
பாகற்காய் சாற்றை குடிப்பது புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும். பாகற்காயில் உள்ள சில புரதங்கள் வளர்சிதை மாற்றக் கோளாறுகளைத் தடுக்கிறது என சொல்லப்படுகிறது.
முகப்பருவை நீக்கவும், இதய நோய், உடல் பருமன், சிறுநீரக பிரச்சனை அபாயத்தையும் குறைக்கின்றது.
எதனுடன் உண்ணலாம்? எதனுடன் உண்ணக்கூடாது?
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழங்கள் ஆகிய பழங்களுடன் பாகற்காய் சாப்பிடக் கூடாது.
பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவற்றுடன் பாகற்காயை உண்பது செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.
மசாலாப் பொருட்களான கிராம்பு, இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் போன்றவற்றுடனும் உண்பதை தவிர்க்கவும்.
மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியுடன் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தக்காளி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களுடனும் பாகற்காய் சாப்பிடக்கூடாது.
பாகற்காய், நெல்லிக்காய் சாறு இரண்டும் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
பாகற்காயின் கசப்பை மட்டுப்படுத்தி இனிப்புச் சுவையைச் சேர்க்க பூசணிக்காயைப் பயன்படுத்தலாம்.
Photo: netmeds
மேலும் சில தகவல்கள்
பாகற்காயின் கசப்பினை குறைப்பதற்கு இரவு முழுக்க உப்பு நீரில் பாகற்காயை ஊறவைத்து காலையில் கழுவி சமைத்தால் இதன் கசப்பு தன்மை தெரியாது.
நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு பாகற்காய் பொடி 3 முதல் 15 கிராம் வரை உட்கொள்ளலாம். அதுவே ஜுஸாக அருந்தினால் 100 முதல் 200 மி.லி அருந்தினால் போதும்.
பாகற்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, அஜீரணம், வயிற்றுப்போக்கு, இரைப்பை புண்கள், சிறுநீரக பாதிப்பு பிரச்சனை ஏற்படும்.
ஆதலால் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிடுவது எந்தவொரு பிரச்சனையும் வராமல் இருக்கும். தினமும் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனையின் படி எடுத்துக் கொள்ளலாம்.
கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டும்.
பி-கிளைகோபுரோட்டீன் மூலக்கூறு மருந்துகளை சாப்பிடுபவர்கள் பாகற்காயை தவிர்க்கலாம்.
விரதம் இருப்பவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடல் பலவீனமானவர்கள் தவிர்க்கலாம். ஏனென்றால் பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதனால் உங்களுக்கு மயக்கம் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |