பணத்தை அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள் யார் தெரியுமா?
எண் கணிதத்தின் படி எந்த தேதியில் பிறந்தவர்கள் அதிகமாக சம்பாதிப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக எண் கணிதத்தின் மூலம் ஒருவரின் எதிர்காலம், குணாதிசயங்கள் இவற்றினை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த எண் கணிதம் என்பதை நாம் பிறந்த தேதியினை வைத்து எண்ணை தீர்மானிக்கின்றது. அதாவது பிறந்த தேதியில் உள்ள எண்ணை கூட்டி கிடைக்கும் ஒற்றை நம்பரை உங்களுக்கான எண் கணித எண்ணாகும்.
எண் கணிதத்தினைக் கொண்டு வருவரின் சம்பாதிக்கும் பணத்தைக் கூட தெரிந்து கொள்ளலாம். அவ்வாறாக எந்த எண்ணைக் கொண்டவர்கள் எப்படிப்பட்ட தனித்துவமான வகையில் பணத்தினை ஈர்க்கின்றனர்.
ஒவ்வொரு எண்களைக் கொண்டவர்கள் தங்களுக்கு போதுமான பணத்தினை எவ்வாறு சம்பாதிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

எண் 1
1ம் எண்ணை கொண்டவர்கள் ஆளுமை மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஆதிக்கம் செலுத்தும் பதவியில் அமர்ந்து மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் இவர்களின் ஆளுமை தான் பணத்தை ஈர்க்கும் தந்திரமாகும். வணிகம், நிர்வாகம், சுயதொழில் என அதிக பணத்தை சம்பாதிப்பார்கள்.
எண் 2
இரண்டாம் எண்ணைக் கொண்டுள்ளவர்கள் பராமரிப்பு மற்றும் படைப்பாற்றல் மற்றும் கலை திறன் வழியாக அதிகம் சம்பாதிக்கின்றனர்.
நடிப்பு, ஓவியம், தயாரிப்பு, நாட்டியம், அறியல் செயல்முறை சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி தங்களது எதிர்பார்ப்பிற்கு அதிகமான பணத்தை ஈட்டுவதாக கூறப்படுகின்றது.

எண் 3
3ம் எண்ணை ஆளுமையாக கொண்டவர்கள் கல்வி மற்றும் கற்பித்தல் சிறந்த பலமாகும். பேச்சாற்றல் மற்றும் அறிவாற்றலில் சிறந்து விளங்கும் இவர்கள் இதன் மூலம் தனக்கான பணத்தை சம்பாதிக்கின்றனர்.
மேலும் வணிகம், விளையாட்டு, நிதி மேலாண்மை போன்றவற்றின் மூலமாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்து அதிகமான வருவாய் ஈட்டுகின்றனர்.
எண் 4 மற்றும் 8
நேர்மை மற்றும் கடினஉழைப்பினை மூலதனமாக வைத்து வருவாயை அதிகரிக்கின்றனர் 4 மற்றும் 8 எண்ணின் ஆதிக்கத்தை கொண்டவர்கள்.
எந்த துறையாக இருந்தாலும் தனது உழைப்பினால் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு ஏற்ற துறைகளாக அறிவியல் துறை, தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, மருத்துவம், ஆராய்ச்சி போன்றவை பார்க்கப்படுகின்றது.

எண் 5
5ம் எண்ணை ஆதிக்கமாக கொண்டுள்ளவர்கள் புதுமையான விடயங்களை தேடி செல்வதுடன், கண்டறியவும் செய்வார்கள். அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு வழியாக பணத்தை சேர்க்க முடியும்.
எண் 6
ஆறாம் எண்ணை ஆதிக்கமாக கொண்டிருப்பவர்கள் கலைத்துறையில் நாட்டம் அதிகம் உள்ளவராக இருப்பார்கள். இவர்கள் இதனையே தனது தொழிமுறை வாழ்க்கையாக மாற்றி வருமானத்தை பெறுகின்றனர்.
இதுமட்டுமின்றி இசை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, நடிப்பு இவற்றின் மூலமாகவும் வருமானத்தை அதிகரித்து பொருளாதார நிலையினை உயர்த்துகின்றனர்.

எண் 7
7ம் எண்ணை ஆதிக்கமாக கொண்டவர்கள் ஆன்மீகம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பயணங்கள் வழியாக பணம் சம்பாதிக்கின்றனர். பொருளாதார நிலையினை மேம்படுத்த ஆன்மீகம் ஒரு ஆயுதமாக இருக்கின்றது.
இதனை வைத்து அமானுஷ்ய விஷயங்கள், கண் கட்டு வித்தைகள், உளவியல் சார்ந்த விடயங்கள் வழியாக வருமானத்தை பெறுகின்றனர்.
எண் 9
9ம் எண்ணை ஆதிக்கமாக கொண்டவர்கள் பணத்தை அதிகம் சம்பாதிக்கும் எண்ணாக பார்க்கப்படுகின்றது. வருமானம் பெறுவதற்கு விளையாட்டை தெரிவு செய்கின்றனர்.
விளையாட்டு மட்டுமின்றி சினிமா மற்றும் திரைத்துறை வழியாகவும் இவர்களது வருமானத்தினை அதிகரித்து செல்வந்தராக இருக்கின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |