Ethirneechal: பதிவு செய்யப்பட்ட அன்பு தர்ஷன் திருமணம்.... கேள்விக்குறியாகிய பார்கவி வாழ்க்கை
எதிர்நீச்சல் சீரியலில் அன்பு மற்றும் தர்ஷன் இருவரது திருமணத்தை பதிவு செய்து அதன் ஆதாரத்தினை காட்டியுள்ளார் குணசேகரன்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் பல டுவிஸ்ட் அரங்கேறி வருகின்றது. குணசேகரனின் ஆட்டம் தற்போது அதி தீவிரமாக மாறியுள்ளது.
தனுஷ்கோடி சென்று தேவகி குறித்த உண்மையை கண்டறிந்த சக்தி வீட்டிற்கு வரும் போது மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

ஆனால் இது குணசேகரனின் ஏற்பாடு தான். அதாவது ஜனனியின் அப்பா குடும்பத்திற்கு எதிராக ஜனனி மற்றும் சக்தி இருவரும் செயல்பட்டு தங்கைக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் பழிவாங்க காத்துக் கொண்டிருந்தவரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குணசேகரன் கெத்து காட்டி வருகின்றார்.
கணவரைக் காப்பாற்ற ஜனனி திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கையில், வீட்டில் மற்றொரு உண்மையை உடைத்துள்ளார்.
அதாவது அன்புவிற்கும், தர்ஷனுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், இதனை பதிவு செய்து அரசாங்கத்திடம் இருந்து ஆதாரத்தையும் பெற்றுள்ளார்.
இதனால் பார்கவி தர்ஷன் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். குணசேகரனின் கொட்டத்தை அடக்குவதற்கு ராணா எப்பொழுது களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |