இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க.... கொலஸ்ட்ரால் தாறுமாறாக அதிகரிக்கும்
நீங்கள் அன்றாடம் செய்யும் என்னென்ன தவறுகள் உங்களது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக உயர்த்துகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கொழுப்பு சத்தால் பயமா?
இன்றைய காலத்தில் அனைத்து தரப்பினரின் உணவு பழக்கவழக்கங்கள் மொத்தமாகவே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
பீட்சா, பர்கர், பஜ்ஜி, போண்டா இவற்றினை அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று தான் பெரும்பாலான நபர்கள் நினைக்கின்றனர்.
இது ஒரு காரணமாக இருந்தாலும் நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகளும் கொழுப்பு சத்தை அதிகரிக்கின்றது. கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உள்ளது.

நல்ல கொழுப்பினை எச்டிஎல் என்றும் கெட்ட கொழுப்பாக எல்டிஎல் மற்றும் டிரை கிளிசரைடு ஆகும். இதில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு சிக்கல் ஏற்படுகின்றது. அந்த வகையில் நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த தவறை செய்யாதீர்கள்
நார்ச்சத்து உணவுகளாக ஓட்ஸ், பீன்ஸ் வகைகள், பேரிக்காய், ஆப்பிள், முளைகட்டிய தானியங்கள் இவற்றினை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி கெட்ட கொழுப்பு குறைக்கவும் செய்கின்றது.

அடிக்கடி வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் எடுத்துக்கொள்வது கொழுப்பை அதிகரிப்பதுடன், டிரான் ஃபேட்டையும் அதிகரிக்கச் செய்கின்றது. ஆதலால் உடல் எடையும் அதிகரிக்கும். கெட்ட கொழுப்பும் அதிகரித்து இதய நோய்க்கு காரணமாகும்.

மீதமான உணவினை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது மிகவும் தவறாகும். மேலும் சமைத்த கடாயில் அடிப்பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய் மற்றும் மசாலாவுடன் மூடி வைக்கப்பட்ட உணவினை மீண்டும் சூடு செய்யும் போது, கெட்ட கொழுப்பை அதிகரித்து இதய தமனிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை அடுத்து பயன்படுத்தக்கூடாது.

எண்ணெய் மற்றும் வெண்ணெய் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஆலிவ் ஆயில் மிதமான அளவில் பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தவரை எண்ணெய் ஊற்றி சமைக்காமல் அவ்வப்போது ஸ்பிரே செய்து பயன்படுத்தலாம். வெண்ணெய் பயன்படுத்தும் போது உணவில் கலோரிகளும் அதிகரித்து, கொழுப்பின் அளவையும் அதிகரிக்கும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது மெட்டபாலிசத்தை பாதிக்கும். அதிக உப்பு சேர்த்து சாப்பிடுவது ஹைபர்டென்ஷனை ஏற்படுத்தி இதய ஆரோக்கியத்தினை பாதிக்கின்றது. சர்க்கரையை அதிகமாக எடுத்துக்கொள்வதால் டிரை கிளிசரைடுகளை அதிகப்படுத்தும். கொழுப்பும் அதிகரிக்கும். நீங்கள் சாப்பிடும் பிரட், சூப், சாஸ் ஆகியவற்றாலும் கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றது.

சமைக்கும்போது சுவையை அதிகரிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தும் சோயா சாஸ், டொமெட்டோ சாஸ் இவற்றினை பயன்படுத்தினாலும், கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |