துரதிஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திஜரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் பிறப்பிலேயே துரதிஷ்டத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு துன்பம் துரத்திக்கொண்டே தான இருக்கும்.

அப்படி வாழ்வில் பல்வேறு வகையிலும் துன்பங்களுக்கு ஆளாகும் பாவப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் மர்மமான குணத்துக்கும் ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் இன்ப துன்பங்களை யாரிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் அவர்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.இவர்கள் தங்களுக்குள் எப்போதும் பலவிதமான எதிர்மறை எண்ணங்களுடன் போராடிக்கொண்டே இருப்பார்கள்.
சாதாரணமாகவே நன்மையளிக்க கூடிய விடயங்களையும் கூட இவர்களின் மிகை சிந்தனை எதிர்மறையாக்கிவிடும். இவர்கள் ஒரு விடயத்தில் சாத்தியமான நன்மைகளை பார்க்காமல், தீமை நடந்தால் என்ன செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் சேந்த்தியை எதிர்பார்ப்பார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
இந்த ராசியினர் சிறிய விஷயங்களுக்குக் கூட அதிகம் கவலைப்படுவார்கள், இது அவர்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் முக்கியமான விடயமாக இருக்கும்.
இவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கவிருக்கும் நன்மைகளில் கூட, எதிர்மறையான விளைவுகள் குறித்து மட்டுமே சிந்திக்கும் தன்மை கொண்டவர்ளாக இருப்பார்கள்.அதனால் வாழ்வில் பல விடயங்ளிலும் துன்பத்தை அனுபவிப்பார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் எப்போதும் கடினமாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதில் உறுதிாக இருப்பார்கள்.ஆனால் இவர்களிடம் எதிர்காலத்தை பற்றிய எதிர்மறை சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.
அவர்கள் மிகவும் மனஉறுதி கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் இவர்களின் மிகை சிந்தனை இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
இவர்களின் அதீத சிந்தனை காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்திலும் கவலைகரமான நாட்களை இவர்களுக்கு பரிசளிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |