கரப்பான் பூச்சி மிதக்கும் காபி.. விரும்பி குடிக்கும் இளைஞர்கள்- 1 கப் எவ்வளவு தெரியுமா?
சீனாவின் தலைநகரில் கரப்பான் பூச்சியை கொண்டு தயாரிக்கப்படும் காபியை இளைஞர்கள் விரும்பி குடிக்கும் செய்தி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக நாம் சாப்பிடும் பானங்கள் அல்லது உணவுகளில் ஏதாவது ஒரு பூச்சி இருந்தாவே அருவருப்பாக தோன்றும். மாறாக கடைகளில் விற்பனையாகும் பானங்களில் ஏதாவது இருந்தாலும் அதனை குடிக்க விரும்பமாட்டோம்.
இப்படி இருக்கும் பட்சத்தில், சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காபி கடையில் கரப்பான் பூச்சிகள் போட்ட காபி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த காபியின் மேல் பகுதியில் கரப்பான் பூச்சி பொடி மற்றும் உலர வைக்கப்பட்ட மஞ்சள் நிற புழுக்கள் தூவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பூச்சிகள் மேலே தூவப்பட்ட குறித்த காபியின் விலை 45 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.560) ஆக விற்பனையாகிறது.
ஏன் கரப்பான் பூச்சி சேர்க்கப்படுகிறது?
இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட குறித்த காபி உலக அளவில் பிரபலமாகி விட்டது. நாள் ஒன்றுக்கு 10 காபி விற்பனையாகிறது என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிப்பதற்கு தீய்ந்த மற்றும் புளிப்பு சுவையில் உள்ள காபியானது எறும்புகள் கொண்டும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பாரம்பரிய சீன மருத்துவப்படி, கரப்பான் பூச்சியை சாப்பிடும் பொழுது மனிதர்களின் இரத்த ஓட்டம் சீராகும் என்றும், மஞ்சள் உணவுப் புழுக்களில் புரதச்சத்துக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் உள்ளது என்றும் நம்பிக்கை உள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “எவ்வளவு பணம் கொடுத்தாலும் இது போன்ற பானங்களை குடிக்க முடியாது..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |