இளம் வயதிலேயே முடி நரைக்குதா? இந்த மோசமான பழக்கத்தை உடனே நிறுத்துங்க
இன்றைய காலத்தின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்களின் மாற்றம் இவற்றினால் தலைமுடி இளம்வயதினருக்கு கூட அதிகமாக நரைத்து விட ஆரம்பித்து விடுகின்றது.
இவ்வாறு முன்கூட்டியே நரைப்பது மரபியல் சார்ந்தது என்றாலும் சில நேரங்களில் மருந்து எதிர்வினைகளும் முடி நரைக்க காரணமாக இருக்கின்றது.
இந்த காரணங்களைத் தவிர, தினசரி வழக்கத்தில் சில தவறுகள் இளமையில் முடி நரைக்க வழிவகுக்கிறது. அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இளம் வயதில் நரைமுடி ஏன்?
தற்போது முடியை கலர் செய்யும் வேலையை பெரும்பாலான நபர்கள் செய்து வருகின்றனர். இதில் கலந்து இருக்கும் ரசாயணம் முடியை சேதப்படுத்துகின்றது. முடி உதிர்தல், நரை முடிக்கு வழி வகுக்கின்றது.
முடியை பளபளப்பாகவும், பட்டு போல வைக்கவும், ரீபாண்டிங், ஸ்மூட்டிங், கரோட்டின் என்ற சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில், இவற்றின் போது பல வகையான ரசாயனங்கள் உச்சந்தலையில் பயன்படுத்தப்படுவதால் முடி வலுவிழந்து போவதுடன், நரைமுடியும் ஏற்படும்.
முடி வளர்ச்சிக்கு சத்துக்கள் கண்டிப்பாக தேவை. வைட்டமின் பி12, தாமிரம், வைட்டமின் டி, இரும்புச்சத்து, ஊட்டச்சாத்து இதன் குறைபாடுகள் இருந்தாலும் முடி நரைக்க ஆரம்பித்துவிடும்.
இன்றைய இளைஞர்கள் பலரும் புகைபிடிக்கும் பழக்கத்தில் ஆளாகி வரும் நிலையில், இதனால் ரத்தம் வேர்களுக்கு செல்லாமல் முடி உதிர்தல், நரைமுடி பிரச்சினை ஆரம்பிக்கும்.
நரை முடியை தடுப்பது எப்படி?
முடி நரைப்பதைத் தடுக்க, உலர் பழங்களான பாதாம், பிஸ்தா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தவிர சூரியகாந்தி விதைகள், பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |