நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா? வெறும் வயிற்றில் இந்த உணவை சாப்பிடாதீங்க...
காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள்.
நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
அதிலும் காலை வெறும்வயிற்றில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமாக பிரச்சனை வராமல் தடுப்பதற்கு, வெறும்வயிற்றில் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

சிட்ரஸ் மற்றும் எலுமிச்சை
சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும் இந்த பழங்களை வெறும்வயிற்றில் எடுத்தால், குடல் சுவற்றினை எரிச்சலூட்டுமாம். ஆகையால் புளிப்பு சுவை கொண்ட இந்த உணவுகளை தவிர்க்கவும். இதிலுள்ள அமிலத்தன்மை குடலுக்கு தீங்கு விளைவித்து அசிடிட்டிக்கு வழிவகுக்குமாம்.

ப்ளாக் காபி
பொதுவாக காபி உடலுக்கு புத்துணர்ச்சியினை அளித்தாலும், ப்ளாக் காபியை வெறும் வயிற்றில் குடித்தால் குடலுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்துகின்றது.
அமில உற்பத்தியினை தூண்டி வயிறு உப்புசம், எரிச்சல், ஆற்றல் இழப்பு இவற்றினை ஏற்படுத்துகின்றது. ஆகையால் வெறும்வயிற்றில் ப்ளாக் காபி குடிப்பதை தவிர்க்கவும்.

காரமான உணவுகள்
அதே போன்று வெறும்வயிற்றில் காரமான உணவினை தவிர்க்கவும். ஏனெனில் வயிறு எரிச்சல், நீண்ட கால அழற்சி இவற்றினை ஏற்படுத்துமாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?
குடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு காலையில் ஊற வைத்த நட்ஸ், ஓட்ஸ், வாழைப்பழம், பிரட் ஆட்லேட், இட்லி, தோசை, சாம்பார், முட்டை, ஆப்பிள் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு எடுத்துக் கொள்வதால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், சுறுசுறுப்பாகவும், உடலில் எந்தவித பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |