தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள காரணம் என்ன?
தயாரிப்பாளர் கே.ராஜன் எடுத்த விபரீத முடிவிற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தயாரிப்பாளர் கே. ராஜன்
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வந்தவர் தான் கே. ராஜன். இவர் பிரம்மச்சாரிகள் படத்தின் மூலம் 1983ம் ஆண்டு தயாரிப்பாளராக களமிறங்கினார்.
பின்பு பல படங்களை தயாரித்ததுடன், சில படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தங்கமான தங்கச்சி உட்பட சில படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவர் நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காரணம் என்ன?
கே. ராஜன் குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு தனது கார் ஓட்டுனருடன் பயணம் செய்ததாகவும், கடைசியாக அவரிடம் நடைபயிற்சி சென்று வருவதாக கூறிவிட்டு பாலத்தில் நடக்க சென்றுள்ளார்.
பின்பு திடீரென மேலே இருந்து கீழே ஆற்றில் குதித்துள்ளார். இதனை அவதானித்த டிரைவர் அக்கம்பக்கத்தினரை அழைத்ததுடன், மக்கள் வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் டிரைவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதற்கான காரணம் சில வெளியாகியுள்ளது. அவர் கடந்த இரண்டு மாதமாக எந்தவொரு சினிமா நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது குடும்பத்தினருடன் பேசிக்கொள்ளாமல் ஹோட்டலில் தங்கியதாக கூறப்படுகின்றது.

மன அழுத்தம் மற்றும் கடன் சுமை இருந்ததால் இவ்வாறான முடிவு எடுத்ததாக கூறப்படும் நிலையில், இது தவறு என்று தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது தயாரிப்பாளரின் பணம் தான் வெளியே 20 கோடிக்கு மேல் இருப்பதாகவும், கடன் பெற்றவர்கள் திருப்பி அடைக்கவில்லை என்பதால் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
மேலும் கடந்த வாரத்தில் உடல்நிலை சரியில்லாமல் ஃபேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதுடன், உடன் அவரது மகன் தான் அவரை கவனித்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |