ஆண்களே பொறாமைப்படும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தோற்றம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் எந்த பெண்ணையும் நொடியில் கவரும் அளவுக்கு பேரழகன்களாக இருப்பார்களாம்.
அப்படி ஆண்களே பொறாமை கொள்ளும் அளவுக்கு அழகிய மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் காட்டியளிக்கும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே கம்பீரமான தோற்றத்தையும், மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் அழகிய முகத்தையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்களின் கரடுமுரடான வடிவம் மற்றும் வலுவான தாடைகள், தடகள உடல் அமைப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட குணம் ஆகியவை மற்றவர்களுக்கு அவர்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும்.
இயல்பாகவே பேரழகன்களாக இருக்கும் இவர்களுக்கு தன்னிச்சையான மற்றும் சுறுசுறுப்பான நடத்தை மேலும் காந்த ஆற்றலை அதிகரிக்கின்றது. இவர்களின் பார்வையில் மற்றவர்களை மயக்கும் சக்தி நிச்சயம் இருக்கும்.
ரிஷபம்
இந்த ராசி ஆண்கள் நல்ல தோற்றம் மற்றும் நேர்த்திக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஒவ்வொரு தெரிவும் தனித்துவமாக தன்மை கொண்டதாக இருக்கும்.
ஒரு ரிஷப ஆண் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க விரும்புவதுடன் இவர்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அழகின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்கள் மற்றவர்களாக தவிர்க்கவே முடியாத அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசி ஆண்களிடம் மயங்காத பெண்களே இருக்க முடியாது. ஆனால் இவர்கள் துணைக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டார்கள்.
சிம்மம்
இந்த ராசி ஆண்கள் கம்பீரமான மற்றும் அழகிய தோற்றம் கொண்டவர்களாகவும், இயற்கையாகவே மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
தடகள உடலமைப்பு மற்றும் உயர்ந்த சுயமரியாதையுடன், சிம்ம ஆண்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
சூரியன் அவர்களை ஆட்சி செய்வதால், சிம்ம ஆண்கள் அரவணைப்பையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறார்கள்.இவர்களின் தோற்றம் சிங்கத்துக்கு நிகரான வசீகரத்தை நிச்சயம் கொண்டிருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |