நீரிழிவு நோய் முதல் உடல் எடை குறைப்பு வரை! கற்றாழையில் ஒளிந்திருக்கும் மருத்துவம்
அநேகமான வீடுகளில் வளர்க்கப்படும் ஓர் தாவரமாக கற்றாழையை நாம் குறிப்பிட முடியும்.
கற்றாழையை எந்தவொரு இடத்திலும் அதிக பராமரிப்பு இன்றி வளர்க்கப்பட முடியும் என்பதே அதன் விசேட அம்சமாகும்.
முற்களைக் கொண்ட இந்த பச்சைத் தவாரம் பல ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே தாங்கிக் கொண்டுள்ளது.
பண்டைய காலம் முதலே இந்த கற்றாழையின் மருத்துவ குணம் பற்றிய தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கற்றாழை ஜெல்
உலகின் அனைத்து வெப்ப வலயப் பகுதிகளிலும் இந்த தாவரம் செழிப்பாக வளரக்கூடியவை. வட ஆபிரிக்கா, தென் ஐரோப்பா போன்ற நாடுகளே இந்த தாவரத்தின் பூர்வீகமாகும்.
இந்த கற்றாழையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஜெல் போன்ற பதார்த்தம் பங்கசுகளை அகற்றக்கூடிய, கிருமிகளை அகற்றக்கூடிய தாவரமாகும்.
இந்த தாரவத்திலிருந்து பெறப்படும் ஜெல் அல்லது களிம்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் மிகவும் ஆரோக்கிய நலன்களைக் கொண்டமைந்தமைவையாகும்.
கற்றாழை பானத்தை கறைந்த கலோரிகளைக் கொண்டு பானமாக அருந்த முடியும். ஸ்முத்திகள் மற்றும் லெமனேட்கள் உடனும் இந்த பானத்தை சேர்த்து அருந்த முடியும்.
இந்த பானத்தை அருந்துவதன் மூலம் கிடைக்கும் நலன்கள்
உணவு செரிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்
கற்றாழை பானம் நல்ல செரிமானத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். வயிறு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒர் பானமாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விட்டமின் சீ போன்ற பொருட்கள் காணப்படுவதனால் செரிமானப் பிரச்சினை உள்ளிட்ட வயிறு சார்பான உபாதைகளுக்கு தீர்வாக இந்த பானத்தை அருந்த முடியும்.
பற் சுகாதாரத்தை பேணும்
கற்றாழை பற்சுகாதாரத்தை பேணுவதற்கான சிறந்த ஓர் பொருளாக கருதப்படுகின்றது.
கற்றாழையில் காணப்படும் பக்றீரியா எதிர் பொருட்கள் பல்வேறு வாய் மற்றும் பற்சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது. பல் ஈர்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், வாய்ச் சுகாதாரப் பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது.
இரத்த சக்கரை அளவினை சமனிலைப்படுத்துகின்றது
கற்றாழை டைப்-2 நீரிழிவு நோய் உடையவர்களின் இரத்த சக்கரை அளவினை சமனிலைப்படுத்துகின்றது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
கற்றாழையில் விட்டமின் சீ அதிகளவில் காணப்படுவதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. பானத்தை அருந்துவதன் மூலம் கலன்களை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் சீ காணப்படுவதனால் இருதய நோய்களுக்கும் தீர்வாக இது அமையும்.
உடல் எடையை குறைக்க உதவுகின்றது
உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்கும் சக்தி கற்றாழை பானத்தில் காணப்படுவதனால் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகின்றது. கொழுப்பை கரைக்கவும், மெட்டாபாலிசத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றது.
கற்றாழை பானம் எவ்வாறு தயாரிப்பது?
- கற்றாழையை வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்
- தோலை அற்றிக் கொள்ளவும் தோலை அகற்றியும் அதன் தெளிந்த நிறத்திலான களிம்பை எடுத்துக் கொள்ளவும்
- தோல் பகுதி ஏதும் காணப்படுகின்றனவா என்பதனை நன்கு பரீட்சிக்கவும் இந்த தோல் பகுதி இருந்தால் கசப்பு தன்மை ஏற்படும்
- ஜெல்லை கழுவி உலர விடவும்
- இரண்டு அங்குல அளவிலான ஜெல் மற்றும் கால் கப் நீர் என்பனவற்றை மிக்ஸில் இட்டு அரைத்துக் கொள்ளவும்
- நன்றாக மசியும் வரையில் மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்
- இந்த திரத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு அதில் சில சொட்டு தேசிக்காய் சேர்க்கவும்.