டைப்-2 நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் தக்காளி சூப் சாப்பிடலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
தக்காளியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நிறமியான லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
தக்காளி சூப் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பானமாகும்.
புற்றுநோய் மற்றும் அழற்சி தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
தக்காளி சூப்பில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கக்கூடியவை.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணை புரியக்கூடியவை. தக்காளி சூப்பில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளை உட்கொள்வதன் மூலம் டைப்-2 நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் மூளை நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். குளிர்காலத்தில் கூட அச்சம் இன்றி சாப்பிடும் உணவு.
தக்காளி சூப்பில் லைகோபீன் உள்ளது. புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு லைகோபீன் மிகவும் அவசியமானது. தினமும் தக்காளி சூப் பருகுவதன் மூலம் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்திவிடலாம்.
தக்காளி சூப் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவும். தக்காளியை உட்கொள்வது புற்றுநோய் செல்களை கொல்வதற்கு தூண்டும்.
புற்றுநோய் கட்டியின் வீரியத்தையும் குறைத்துவிடும். தக்காளி சூப்பை மருந்தாக உட்கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தக்காளியில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்கக்கூடியது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை உள்வாங்கி சருமத்தை பாதுகாக்கக் கூடியது. தக்காளி சூப்பில் வைட்டமின் ஏ, சி மற்றும் கரோனாய்டுகள் உள்ளன. அவை கண் பார்வை திறனை மேம்படுத்தக்கூடியவை.
வயது அதிகரிக்கும்போது எலும்புகள் பலவீனமடையும். எலும்பு முறிவுகள் போன்ற ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது எலும்புகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.
அத்தகைய பாதிப்புகளில் ஒன்றான ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட நிலைமையை தக்காளி சூப் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கவும் செய்யும்.
அதற்கேற்ப உடலில் எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்தும். எலும்பு வலிமையை ஒழுங்குப்படுத்தும். எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.