viral video: மரத்துக்கு மரம் தாவும் பாலூட்டி! பீதியை கிளப்பும் காட்சி
ஒரு உயரமான மரக்கிளையில் இருந்து இன்னொரு மரத்துக்க அசால்ட்டாக தாவும் ஒரு விலங்கின் பரவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கிரேட்டர் கிளைடர் என்ப்படும் இந்த விலங்கு கிழக்கு ஆஸ்திரேலியாவின் காடுகளில் காணப்படும் ஒரு வகை பாலூட்டி இனம் ஆகும். இது யூகலிப்டஸ் இலைகளை அடைய அதன் மூட்டுகளுக்கு இடையில் காணப்படும் ஒரு சவ்வைப் பயன்படுத்தி மரத்திலிருந்து மரத்திற்கு எளிமையாக தாவுகின்றது.
இந்த திறன் கிளைடரை அதிக தூரம் கடக்கவும் வேட்டையாடுபவர்களைத் தவிர்க்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
ஆஸ்திரேலிய விலங்குகளிலேயே மனிதர்களின் வசிப்பிடங்களில் பயமின்றி புழங்கும் மரவாழ் இரவு விலங்குககளாக இவை அறியப்படுகின்றது.
பாய்ச்சல்களின் போது, அது சமநிலைக்கு முன்கூட்டியே அதன் வாலைப் பயன்படுத்துகிறது. இந்த காட்சி ஆஸ்திரேலியாவின் கங்கலூனில் படமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |