தளபதி விஜய் 10 வருடமாக பேட்டி கொடுக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது.
நெல்சன் இந்த படத்தை இயக்க, விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ் செல்வராகவன் கிங்ஸ்லி யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது.
அதற்கு பதிலாக தளபதி விஜய் சன் டிவியில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு விஜய் பேட்டி அளித்துள்ளார்.
இந்தப்பேட்டியில், பத்து வருடங்களாக விஜய் பேட்டி அளிக்காதது ஏன் என தெரியவந்துள்ளது. அது, “வில்லு படத்தின் பிரஸ்மீட்டில் விஜய் கோபமாக கத்தியது மற்றும் தலைவா படத்தின் கசப்பான அனுபவங்கள் ஆகியவை தான் 10 வருடமாக பேட்டி தராமல் இருந்ததற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும், விஜய் பல சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஸ்டேடஸ் வைத்துகொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து சுவாரசியமான செய்திகளை படிக்க... பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த சிம்பு! கடைசி ப்ரொமோவை தெறிக்க விட்ட பிக்பாஸ்